india

img

செப்.25ல் பாரத் பந்த்.... சம்யுக்த கிசான் மோர்ச்சா அறிவிப்பு....

புதுதில்லி:
கார்ப்பரேட் கம்பெனிகள் ஆதாயம் பெறும்வகையிலும் விவசாயிகளின் வாழ்வா தாரத்தை அழிக்கும் வகையிலும் ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள  வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி நாடு முழுவதும் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தில்லி மாநில எல்லைகளில் பல்வேறு மாநில விவசாயிகள் பலமாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் மோடி அரசு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கே விசுவாசமாக நடந்து கொள்கிறது என்று விவசாயிகள் கொந்தளிப்புடன் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் தொடர் போராட்டத்தின் அடுத்த கட்டமாக ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராகவும் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும் செப்டம்பர் 25 ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று  விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.இது தொடர்பாக சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பை சேர்ந்த ஆஷிஷ் மிட்டல்  தில்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக  செப்டம்பர் 25 ஆம் தேதி பாரத் பந்த் நடத்த நாங்கள்
அழைப்பு விடுத்துள்ளோம். கடந்த ஆண்டும்  கொரோனா தொற்றுக்கு மத்தியில் வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது.  அந்த வேலை நிறுத்தம் வெற்றி பெற்றது. அதைவிட பெருவெற்றியை அடுத்தமாதம் நடத்தும் வேலை நிறுத்தம் பெறும் என்று தெரிவித்தார்.

;