india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்...

பாஸ்ட்டேக் இல்லையெனில்  இரட்டிப்பு கட்டணம்

பிப்ரவரி 15 நள்ளிரவு முதல் ஃபாஸ்ட் டேக் இல்லாமல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி களை கடக்கும்  எந்தவொரு வாகனமும் இரட்டிப்பாக  கட்டணம் செலுத்த வேண்டும்என்று சாலை போக்குவரத்து அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்ட் டேக் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள தும், பாஸ்ட் டேக் பொருத்துவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படாது என்றும்  ஏற்கனவே மத்திய அரசு அறிவித்துள்ளது.

                                                       *******************

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண டோக்கன் திங்களன்று முதல் விநியோகம் செய்யப்படும் என்று போக்குவரத்துக் கழகமேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். 

                                                       *******************

உத்தரகண்ட் வெள்ளப்பெருக் கில் சிக்கி மாயமானவர்களில் இதுவரை 50 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஞாயிறன்று ஒரேநாளில் 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக மீட்பு குழுவினர் கூறினர். 

                                                       *******************

துபாயில் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சியில், ரூ.450 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இந்திய அரங்கத்தின் கட்டுமான பணிகள் மார்ச் 31-க்குள் நிறைவடையும் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. 

                                                       *******************

வன்முறையை தூண்டும் வகையிலான பேச்சுக்கு எதிரான கண்டன தீர்மான விசாரணையில் அதிக ஆதரவு வாக்குகளை பெற்றதால் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் செனட் சபையால் விடுவிக்கப்பட்டார்.

;