india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்...

கிராம சபைக் கூட்டங்களை நடத்த கோரிய வழக்கில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் ஒரு வாரம் கெடு விதித்துள்ளது. கிராமசபை கூட்டங்களை நடத்த உத்தரவிடக் கோரி திமுக, மக்கள் நீதி மய்யம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

                                                      *********************

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று மாநிலங்கவையில் மத்திய சுகாதாரத்துறைஅமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரி வித்துள்ளார்.

                                                      *********************

இதுவரை ரூ.338 கோடி மதிப்பி லான கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

                                                      *********************

நீர்நிலைகளைக் காக்க வேண்டியது அரசின் கடமை என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

                                                      *********************

திருப்பதிக்கு ஒரு நாள் சுற்றுலா திட்டத்தை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது. 

                                                      *********************

பெட்ரோல் லிட்டருக்கு 90.44 ரூபாய், டீசல் லிட்டருக்கு 83.52 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

                                                      *********************

திமுக ஆட்சிக்கு வந்த‌தும் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

                                                      *********************

ஜெர்மனியைச் சேர்ந்த லுப்தன்சா  விமான நிறுவனம் 103 இந்திய விமானிகளை பணி நீக்கம் செய்துள்ளது.

                                                      *********************

நீலகிரி மாவட்டம் உதகையில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடும் உறைபனி நிலவுகிறது. உதகை தாவரவியல் பூங்காவில் வெள்ளியன்று காலை 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி யுள்ளது.

                                                      *********************

பிரதமர் மோடி வருகின்ற 14-ம் தேதி சென்னை வருவதை முன்னிட்டு 4 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.

                                                      *********************

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தரமற்ற சிக்கன் பிரியாணி விற்ற ஓட்டல் உரிமையாளருக்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

                                                      *********************

வெறுப்புணர்வைத் தூண்டும் அவதூறு கருத்துகள் மற்றும் ஆபாச கருத்துகளை நீக்கக்கோரிய விவகாரத்தில் டிவிட்டர் நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

;