india

img

மக்களாட்சியை கொண்டாடும் சர்வதேச ஜனநாயக தினம் இன்று!

மக்களாட்சியைக் கொண்டாடும் வகையில்  செப்டம்பர் 15-ஆம் தேதி சர்வதேச ஜனநாயக தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

ஜனநாயகம் என்பது அனைத்து குடிமக்களின் சமமான பங்களிப்புடன் நடைபெறும் ஒரு வகையான மக்களாட்சி.

தனிநபர்கள், பொதுச் சமூகம், அரசாங்கம் என அனைத்திற்கும் பங்கு இருக்கும் பட்சத்தில் ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் அதன் மாண்பினையும் கோட்பாடுகளையும் உலகம் முழுவதும் பரவலாக்க இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

இன்று சர்வதேச அளவில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான நாடுகளில் மன்னராட்சி நடைபெறுகின்றன.

மனித உரிமைகளுக்கான மரியாதை அளித்தல், அடிப்படை சுதந்திரம் வழங்குவது மற்றும் சரியான கால இடைவெளியில் தேர்தல்களை நடத்துவது உள்ளிட்டவை ஜனநாயகத்தின் அடிப்படை கூறு என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.

இந்தியாவின் அரசியல் கட்டமைப்பு ஒரு ஜனநாயக குடியரசு தன்மை கொண்டதாகும். இது மக்களால் ஆன அரசு. இங்கு நாட்டின் அனைத்து வயது வந்தோரும் அரசு நிர்வாகத்தில் நேரடியாக அல்லது மறைமுகமாகப் பங்கு வகிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.