பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் மக ளிர் 50 கிலோ மல்யுத்தப் பிரிவில் இந்தியாவின் நட்சத் திர வீராங்கனை வினேஷ் போகத் இறு திச் சுற்றுக்கு முன்னேறினார். எனினும் இறுதிப்போட்டிக்கு முன்னர் அரசியல் சூழ்ச்சியால் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததாக கூறி தகுதி நீக்கம் செய்யப் பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த வினேஷ் போகத் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெற்று, மல்யுத்த வீராங்கனை களின் போராட்டத்தை (பிரிஜ் பூஷண் பாலியல் வன்முறைக்கு எதிராக) போல மீண்டும் பாஜகவுக்கு எதிரான போராட் டத்தை தொடரப்போவதாகக் கூறி காங்கி ரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் கட்சி ஹரியானா சட்டமன்ற தேர்தலில் வினேஷ் போகத்திற்கு ஜூலானா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது.
தேர்தலிலும் போராட்டம்...
தனது சொந்த கிராமமான பலா லிக்கு உட்பட்ட ஜூலானா தொகுதியில் களமிறங்கிய வினேஷ் போகத் போது மான அரசியல் அனுபவம் இல்லாத சூழ லிலும் அரசியலில் முதிர்ச்சி பெற்றவர் போல தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். செல்லும் இடங்களெல்லாம் பாஜகவை பந்தாடினார். செவ்வாயன்று நடை பெற்ற வாக்கு எண்ணிக்கையில் முதலி ரண்டு சுற்றுகளில் முன்னிலையில் இருந்த வினேஷ் போகத், திடீரென 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்ன டைவை சந்தித்தார். மல்யுத்த போட்டி களைப் போலவே ஜூலானா தொகுதி யின் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நகர்ந்த நிலையில், கடைசி சுற்று முடி வில் 6,015 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் யோகேஷ் குமாரை வினேஷ் போகத் வீழ்த்தினார்.
காங்கிரசுக்கு சாதகமில்லாத தொகுதி
1967 முதல் 2019 வரை 13 சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டுள்ள ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் 3 முறை மட்டுமே வென்றுள்ளது. கடைசியாக ஜூலானா தொகுதியில் 2005இல் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று இருந்தது. அதன்பிறகு 19 ஆண்டு களாக ஜூலானா தொகுதியை கைப்பற்ற முடியாமல் திணறியது.
இந்நிலையில், வினேஷ் போகத்தின் நட்சத்திர அடையாள வியூகத்தை வைத்து காங்கிரஸ் கட்சி ஜூலானா தொகுதியை தன் வசம் கொண்டுள்ளது. மல்யுத்த களத்தைப் போன்ற பெரும் சவால்மிக்க ஜூலானா களத்தில் வர லாறு காணாத உட்கட்சி பூசல்கள், பாஜக வின் சாதிய சமன்பாடுகள் என பல தடைகளையும் தாண்டியே வினேஷ் போகத் இப்போதும் வென்று ஹரியானா சட்டமன்றத்திற்கு செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குவியும் வாழ்த்து
“இந்தியாவின் நட்சத்திர வீராங்கனைக்கு எனது மன மார்ந்த வாழ்த்துக்கள். காங்கிரஸ் சார்பில் போட்டி யிட்ட வினேஷ் போகத் ஹரியானா வில் ஜூலானா சட்டமன்றத் தொகு தியில் இருந்து வெற்றி பெற்றுள் ளார். மக்களுக்கான பிரதிநிதியாக மக்கள் சேவையின் இந்த புதிய அத்தியாயத்தில் அவர் சிறப்பாக வெற்றிபெற வாழ்த்துகிறேன். பாசிச சக்திகளுக்கு எதிராக அவ ரது ஆற்றல் தொடரட்டும்” என தமிழ்நாடு துணை முதல்வர் உதய நிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
வினேஷ் போகத்தின் நண்பரும், காங்கிரஸ் விவ சாய சங்கத் தலைவருமான பஜ்ரங் புனியா, “இந்தியா வின் மகள் வினேஷ் போகத்தின் வெற்றிக்கு பல வாழ்த்துக் கள். இந்தப் போட்டி ஒரு ஜூலானா தொகுதிக்காக மட்டும் அல்ல, மற்ற 3-4 வேட்பாளர்களுடன் மட்டும் அல்ல, கட்சி களுக்கு இடையேயான சண்டை மட்டுமல்ல. இந்த போராட்டம் நாட்டின் பலமான அடக்குமுறை சக்திகளுக்கு எதிரானது” என வாழ்த்து தெரிவித்துள்ளார். இதே போல அரசியல் கட்சித் தலைவர்கள், நெட்டிசன்கள் என பல்வேறு தரப்பினரும் வினேஷ் போகத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பாஜகவின் சாதி அரசியல் வியூகம் தகர்ந்தது
ஜூலானா தொகுதி ஜாட் சமூகத்தினர் பெரும் பான்மை வசிக்கும் தொகுதியாகும். அங்கு மொத்தம் 1,85,565 வாக்காளர்கள் உள்ளன. மொத்த வாக்குகளில் கிட்டத்தட்ட 81,000 வாக்குகள் ஜாட் இனத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் ஆவர். இதர வாக்குகள் பிற்படுத் தப்பட்ட மற்றும் தலித், முஸ்லிம் மக்களைச் சார்ந்தவை. ஜாட் சமூ கத்தை சேர்ந்த வினேஷை காங்கிரஸ் களமிறக்கி யது.பாஜகவின் யோகேஷ் குமாரை தவிர, ஜேஜேபியின் அமர்ஜீத் தண்டா, ஆம் ஆத்மியின் கவிதா ராணி, இந்திய தேசிய லோக் தளத்தின் சுரேந்தர் உள்ளிட்ட அனைவரும் ஜாட் சமூகத்தை சேர்ந்தவர்கள் தான். யோகேஷ் குமார் ஜாட் அல்லாத பிற் படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்.
ஜேஜேபி, ஆம் ஆத்மி, இந்திய தேசிய லோக் தளம் ஜாட் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வினேஷ் போகத்திற்கு செல்ல வேண்டிய வாக்குகள் பிரியும் என்றும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த வாக்குகள் பிரியாது என்பதை கணக்கில் கொண்டு, ஜாட் அல்லாத யோகேஷ் குமாருக்கு சீட் வழங்கியது பாஜக. ஜாட் வாக்குகள் பிரிந்தாலும் வினேஷ் போகத் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித், முஸ்லிம் மக்களின் வாக்குகளையும் தன் பக்கம் இழுத்து, பாஜகவின் சாதி வியூக அரசியலை தகர்த்துள்ளார்.
இவிஎம் பேட்டரி சார்ஜ் அதிகரித்தது எப்படி?
ஹரியானா சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி பல இருந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், காங்கி ரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் காங்கிரஸ் கட்சி வாக்கு எண்ணிக்கை யின் முடிவுகளை தாமதமாக வெளியிட்டதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடி தம் மூலம் புகார் அளித்தார். ஆனால் இந்த புகார் எதிர்மறையானது என தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில், ஹிசார், மகேந்திரகர் மற்றும் பானி பட் மாவட்டங்களில் இருந்த இவிஎம் வாக்குப்பதிவு இயந்திரங்களின் பேட்டரி அளவு அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி யுள்ளன. வாக்கு எண்ணிக்கை முகவர் ஒருவர் (காங்கிரஸ்) அளித்த பேட்டியின் அடிப்படையில் காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா கூறுகையில்,”ஹிசார், மகேந்திரகர் மற்றும் பானிபட் மாவட்டங்களில் இருந்த இவிஎம் வாக்குப்பதிவு இயந்திரங்களின் பேட்டரி சார்ஜ் அளவு 99% ஆக அதிகரித்தது எப்படி? இந்த பகுதி களின் முடிவுகள் தான் காங்கிரஸை தோற்கடித்தன. 60-70% இயந்திரங்களில் வாக்குப் பதிவு சீர்குலைக்கப்படவில்லை. ஹரியானா தேர்தல் முடிவு பாரபட்சமானது” என அவர் கூறினார்.
வாக்கு எண்ணிக்கை முடிந்த பின் இவிஎம் இயந்திரங்களில் 60 முதல் 70% அளவு பேட்டரி சார்ஜ் இருக்கும். ஆனால் ஹரியானாவில் பாஜக அதிக தொகுதி களை வென்ற மாவட்டங்களில் 99% அளவு சார்ஜ் இருந்துள்ளது. இது பலத்த சந்தே கத்தை கிளப்பியுள்ளது.