india

img

காலத்தை வென்றவர்கள் : தோழர் நிருபன் சக்கரவர்த்தி நினைவு நாள்....

தோழர் நிருபன் சக்கரவர்த்தி தற்போதைய வங்கதேசத்தின் தலைநகர் டாக்கா மாவட்டத்தில் (பிரிட்டிஷ் இந்தியாவில்) 1905ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் நாள் பிறந்தார். அவர் டாக்கா பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும்போதே படிப்பை விட்டு இந்தியச் சுதந்திரப் போரில் பங்கேற்றார். இந்தியச் சுதந்திரப் போரின் ஒரு பகுதியான ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டார்.

1934ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த நிருபன் 1937ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் வங்காளச் செயலாளராக பொறுப்பேற்று செயல்பட்டார். 1950ஆம் ஆண்டில் கட்சியின் ஆலோசனைப்படி திரிபுரா சென்று பணியாற்றினார். 1964ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டபோது தம்மை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டார். 1967ல் கட்சியின் திரிபுரா மாநிலச் செயலாளரானார். 1972ல் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகவும் 1984ஆம் ஆண்டில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.1962ஆம் ஆண்டு திரிபுரா மாநில எதிர்க்கட்சித் தலைவரானார். 1977 ஆம் ஆண்டில் அமைந்த திரிபுரா மாநில கூட்டணியின் குறுகியகால அரசில் அமைச்சர் பதவி வகித்தார். 1978 முதல் 1988 வரை திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அமைந்த இடது முன்னணி அரசில் முதல்வர் பொறுப்பேற்றுத் திறம்பட ஆட்சி புரிந்தார். 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 25ல் வயது மூப்பின் காரணமாக 99வயதில் காலமானார். அவரது அர்ப்பணிப்பு மிக்க கட்சிப் பணியும், தூய நிர்வாகமும், எளிமை வாழ்வும் நமக்கு வழிகாட்டியாய் விளங்கும்.

===பெரணமல்லூர் சேகரன்===

;