india

img

தூய்மைப்படுத்திய பிறகே கட்சியில் சேர்ப்போம்.. பாஜக-விலிருந்து வந்த 140 பேர் மீது கிருமிநாசினி தெளித்த திரிணாமுல்....

கொல்கத்தா:
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, திரிணாமுல் காங்கிரசின் இரண்டாம் கட்டத் தலைவர்கள், மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏ-க்கள் என பலரையும் பாஜக தன்பக்கம் இழுத்தது. திரிணாமுல் ஆதரவு நடிகர் - நடிகைகளையும் கூட விட்டுவைக்கவில்லை.

எனினும், மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியைப் பாஜக பெறமுடியாத நிலையில், காட்சிகள் மாறத் துவங்கி விட்டன. பாஜகவுக்குத் தாவிய முகுல் ராய் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் மீண்டும் திரிணாமுலுக்கு திரும்பிவந்து கொண்டிருக்கின்றனர். பாஜக தொண்டர்களும் பலர் திரிணாமுல் கட்சியில் சேர்ந்து கொண்டிருக் கின்றனர்.இந்நிலையில் பாஜக-விலிருந்து வருவோர் மீது கிருமிநாசினி தெளித்து - அதன்பிறகே அவர்களை திரிணாமுல் கட்சியில் சேர்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்கத்தின் பிர்பூம் மாவட்டம் இளம்பஜார் வட்டாரத்தில்தான் இந்த நிகழ்வு நடந்துள்ளது.இங்கு சுமார் 140 பேர் பாஜக-விலிருந்து திரிணாமுல் கட்சிக்கு வந்த நிலையில், அவர்களை மேடையில் ஏற்றி கிருமி நாசினி செலுத்தும் கருவிமூலம் அவர்களை சுத்தப்படுத்திய பிறகே, திரிணாமுல் காங்கிரஸ் அவர்களுக்கு கொடியை வழங்கி கட்சியில் சேர்த்துள்ளது. ‘பாஜக-வில் பணியாற்றியவர்களை மீண்டும் ஏற்பதற்கு முன் அவர்களை தூய்மைப்படுத்த வேண்டியது அவசியமாகிறது’ என்று உள்ளூர் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.முன்னதாக ஹூக்ளி மாவட்டத்தி லும் இதேபோல பாஜக-விலிருந்து விலகி திரிணாமுல் காங்கிரசில் இணைந்த 200 பேர் தங்களின் தலையை மொட்டையடித்துக் கொண்டனர். பாஜக-வில் இணைந்த பாவத்துக்கு பரிகாரமாக இதை மேற்கொண்டதாக அப்போது அவர்கள் கூறினர்.

;