election2021

img

மேற்குவங்கத்தில் திரிணாமுல் போடும் சண்டை சித்தாந்த ரீதியிலானது அல்ல.... பாஜக, ஆர்எஸ்எஸ்-சுடன் கூட்டணி சேர்ந்தவர்தான் மம்தா.... ராகுல் காந்தி விமர்சனம்...

கொல்கத்தா:
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட் டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் நான்குகட்ட தேர் தல் முடிந்து விட்டது. தற்போது ஐந்தாவது கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இடதுசாரிகள்- காங்கிரஸ் - இந்திய மதச்சார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் அடங்கிய ‘சம்யுக்தா மோர்ச்சா’ கூட்டணிக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்கத்தின்கோல்போக்கர், உத்தர தினஜ்பூர்உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரத்தில்ஈடுபட்டார். இந்தக் கூட்டங்களில் பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து ராகுல் காந்தி பேசியிருப்பதாவது:நாங்கள் (சம்யுக்த மோர்ச்சா)இங்கு தேர்தலில் போட்டியிடவில்லை. வங்கத்தின் எதிர்காலத் தைப் பாதுகாக்க முயற்சிக்கிறோம். ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக-வின்சித்தாந்தம் மேற்குவங்க மாநிலத்திற்கு ஆபத்து; அது, மேற்குவங்கத்தின் கலாச்சாரம், பாரம்பரியத்தை அழிக்கப் பார்க்கிறது. மாநிலத்தைப் பிரித்தாள விரும்புகிறது என்று எச்சரிக்கை செய்கிறோம். அசாமில் இதைத்தான் அவர்கள் செய்தனர். தமிழகத்தில் தனது கூட்டணி கட்சியான அதிமுக-வுடன் சேர்ந்தும், இதைத்தான் செய்ய முயன்று வருகின்றனர்.

வெறுப்பு, வன்முறை, பிரித்தாளும் அரசியல் போன்றவற்றைத் தவிர வேறு எதையும் பாஜக-வால் கொடுக்க முடியாது. சோனார் பங்ளா(பொன்னான மேற்குவங்கம்) கோஷத்தை பாஜகவினர் எழுப்புகின்றனர். ஆனால் இது ஒரு கானல்நீர். ஏனெனில், ‘சோனார் பங்ளா’என்ற இதேபோன்ற கனவுகளைத் தான் ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்கள் விற்று வருகின்றனர். ஆனால்,மதங்கள், சாதிகள், மொழிகள் அடிப்படையில் மக்களை பிரிப்பதைத் தவிர வேறு எதையும் அவர்கள் வெற்றிபெற்ற மாநிலங்களில் செய்யவில்லை.நீங்கள் (மக்கள்) திரிணாமுல் காங்கிரசுக்கு வாய்ப்பு கொடுத்தீர் கள். ஆனால் அவர்கள் நல்லாட்சி தருவதில் தோற்று விட்டனர். திரிணாமுல் தனது ‘கேலா ஹோப்’ (விளையாட்டு விளையாடப்படும்) எனும் வாக்கரசியல் முழக்கத்திற்குப் பதில் மாநிலத்தின் உள்கட்டமைப்பில் கவனம் செலுத்தியிருக்கலாம். மக்கள் வேலைபெற முன்கூட் டியே பணம் செலுத்த வேண்டிய ஒரேமாநிலமாக, மேற்குவங்கம் உள்ளது.

திரிணாமுல் மீண்டும் வெற்றிபெற் றால், மாநிலத்தின் லட்சக்கணக்கான மக்கள் மீண்டும் வேலைதேடி அலைய வேண்டியதுதான். பிரதமர்மோடியும் சொன்னபடி வேலைகளை உருவாக்கப் போவதில்லை.நாங்கள் ஒருபோதும் பாஜகவுடனோ, ஆர்எஸ்எஸ் உடனோ கூட்டணி வைப்பதில்லை. எங்கள் போராட்டம் அரசியல் ரீதியானது மட்டுமல்ல. மாறாக, சித்தாந்த ரீதியிலும் ஆனது. ஆனால் மம்தாவுக்கு இதுவெறும் ஒரு அரசியல் போராட்டம் தான்.ஆனால், நாங்கள் பாஜகவிடம் சரணடையமாட்டோம். இது பாஜகவுக்கே நன்றாக தெரியும். அதனால்தான் அவர்கள் காங்கிரஸ் இல்லாத இந்தியாவுக்கு (காங்கிரஸ் முகத் பாரத்) அழைப்பு விடுக்கிறார்கள். திரிணாமுல் காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற கோஷத்தை அவர் கள் ஒருபோதும் எழுப்புவதில்லை. அவர்களுக்குத் திரிணாமுலுடன் பிரச்சனை இல்லை. ஏனெனில் திரிணாமுல் ஏற்கெனவே பாஜக-வின் கூட்டணியில் இருந்திருக்கிறது.எனவே, மேற்கு வங்கத்தை புதிய வளர்ச்சியின் சகாப்தத்தில் கொண்டு செல்ல காங்கிரஸ் - இடதுசாரி கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்க மக்களை வேண்டுகிறேன்.இவ்வாறு ராகுல் காந்தி பேசியுள்ளார்.

;