கொல்கத்தா,அக்டோபர்.08- ஆர்ஜிகர் மருத்துவமனையில் பணிபுரியும் மூத்த மருத்துவர்கள் 50 பேர் திடீர் ராஜினாமா செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜிகர் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
பாலியல் வன்கொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவருக்கு நீதி கேட்டும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் இளநிலை மருத்துவர்களுக்கு ஆதரவாக ராஜினாமா செய்துள்ளதாக மூத்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.