india

img

மேற்குவங்க வன்முறைக்கு காரணமானோரை தண்டிக்கக்கோரி குடியரசுத் தலைவருக்கு கடிதம்... 146 ஓய்வுபெற்ற நீதிபதிகள், உயர் அதிகாரிகள் அனுப்பினர்....

கொல்கத்தா:
மேற்கு வங்க வன்முறைக்குகாரணமான நபர்களை தப்பிக்க விடாமல் தண்டிக்கவேண்டும் என்றுவலியுறுத்தி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 146 பேர் கூட்டாக கடிதம்எழுதியுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தாவின் ஆளும்திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. தேர்தல் முடிந்த பிறகு  திரிணாமுல் கட்சியினர் மற்ற கட்சிகளைச்சேர்ந்தவர்களை கடுமையாக தாக்கி வருகின்றனர். கம்யூனிஸ்ட்கட்சியினர் உட்பட இடதுசாரி கட்சியினரை குறிவைத்து தாக்கி வருவதாக அக்கட்சியின் தலைவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதற்கு அந்த மாநில எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேற்கு வங்கத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் பலர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் வன்முறைக்கு காரணமான நபர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்திதில்லி உயர் நீதிமன்ற முன்னாள்தலைமை நீதிபதி பி.சி.படேல் உள்ளிட்ட ஓய்வு பெற்ற நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் 146 பேர் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அவர்கள்அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வரலாறு காணாத அளவுக்கு வன்முறைச் சம்பவங்கள் நடந்திருப்பது உண்மை. ஊடகங்கள் வாயிலாகவும், நேரில் பார்த்த சாட்சியங்கள்மூலமாகவும் இந்த சம்பவங்கள் தெரியவந்துள்ளன. சொத்துகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள் ளன. கொலை, பாலியல் பலாத்காரச் சம்பவம், தனி நபர் மீது தாக்குதல் உள்ளிட்டவையும் அரங்கேறியுள்ளன. இந்த தேச விரோத சக்திகளால் பலர் தங்களது வீடுகளை இழந்துவிட்டு வேறு மாநிலத்துக்கு அஞ்சி ஓடியுள்ளனர். உயிருக்கு பயந்து வாழும் சூழலும் அங்கு நிலவுகிறது.

இதன்மூலம் அங்கு மாவட்ட நிர்வாகமும், காவல்துறையினரும் முழுமையாகச் செயல்படவில்லை என்பது தெரியவருகிறது. அவர்கள்இந்த விஷயத்தில் தோல்வி அடைந்துவிட்டனர். இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் தொடரக் கூடாது. இதுதொடர்ந்தால் இந்தியாவின் பழமையானஜனநாயகத்துக்கு ஆபத்து வந்துவிடும். இந்த சம்பவங்களுக்குக் காரணமான நபர்கள் தயவு தாட்சண்யமின்றி தண்டிக்கப்படவேண்டும்.முதலாவதாக, கடமையை செய்யத் தவறிய அரசு அதிகாரி
கள் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இரண்டாவதாக அரசியல் லாபத்துக்காக இதைத் தூண்டுபவர் யார் என்பதை கண்டறியவேண்டும். மூன்றாவதாக அனைத்து வன்முறை சம்பவங்கள்தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்யவேண்டும். இறுதியாக குற்றம் புரிந்தவர்கள் சட்டத்தின்முன்பு நிறுத்தப்படவேண்டும். அவ ர்கள் தண்டிக்கப்படவேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள் ளது. இதற்கிடையில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை தொடர்பாக மேற்கு வங்க அரசு பதில்அளிக்கக் கோரி உச்சநீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

;