india

img

திரிணாமுல் கட்சியின் குணால் கோஷ் ரூ.2.67 கோடியை திருப்பி அளித்தார்.... சாரதா சீட்டு மோசடி வழக்கிலிருந்து தப்பிக்க முயற்சி.....

கொல்கத்தா:
மேற்கு வங்கத்தில், மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களால் அரங் கேற்றப்பட்ட மிகப்பெரிய ஊழல், சாரதா சீட்டுக் கம்பெனி மோசடியாகும்.

மக்கள்சிறுகச் சிறுக சேமித்து வைத்திருந்த பல நூறுகோடி ரூபாயைதிரிணாமுல் தலைவர்கள் சூறையாடினர்.இதில், மம்தாவுக்கு நெருக்கமான முக்கியமான அமைச்சர்கள், நாடாளுமன்ற- சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இருந்த தொடர்பு, ஆதாரங்களுடன் வெளியானது. அந்தக் கட்சியைச் சேர்ந்த பலரும் சிறைக்குச் சென்றனர். மேலும், வழக்கைக் காரணம் காட்டியேபலரை, பாஜக தங்கள் கட் சிக்கு இழுத்துக் கொண்டது. மேற்குவங்கத்தில் பாஜககாலூன்றியதற்கு திரிணாமுல் கட்சியின், ‘நாரதா’, ‘சாரதா’ சிட்பண்ட் ஊழல் களும் முக்கியக் காரணம்.

இவ்வாறு, வழக்கில் மாட்டி சிறைசென்றவர்களில் திரிணாமுல் கட்சியின் குணால்கோஷூம் ஒருவர் ஆவார்.சாரதா சீட்டுக் கம்பெனியிடமிருந்து ரூ. 2 கோடியே 67லட்சத்தை, தனது டிவி சேனலின் பெயரில் இவர் பெற்றிருந்தார்.ஒருகட்டத்தில் அமலாக் கத்துறையிடம் சமரசம் பேசியகுணால் கோஷ், ‘சாரதா’ கம்பெனி பணம் ரூ. 2.67 கோடியைதிரும்ப ஒப்படைத்து விடுவதாக கூறியிருந்தார். அமலாக்கத்துறையும் அதற்கு ஒப்புக்கொண்டது. இதனடிப்படையில் ரூ. 2.67 கோடியை குணால்கோஷ் தற்போது அமலாக்கத்துறையிடம் ஒப்படைத்துள்ளார்.அண்மையில் திரிணாமுல் கட்சியிலிருந்து பாஜக-வில் இணைந்த பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் மிதுன் சக்கரவர்த்தியும் இதேபோல சாரதாசிட்பண்ட் வழக்கில் சிக்கி, ஊழல் பணம் ரூ. 1 கோடியே20 லட்சத்தைத் திருப்பி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

;