india

img

லட்சத்தீவில் மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமைக்கு பதில் இனி ஞாயிறு விடுமுறை-மக்கள் எதிர்ப்பு

இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் லட்சத்தீவில் மாணவர்களுக்கு இனி வெள்ளிக்கிழமைக்குப் பதிலாக ஞாயிறு விடுமுறை என அறிவிக்கப்பட்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கேரளாவுக்கு அருகே அரபிக்கடலில் உள்ள தீவுதான் லட்சத்தீவு. இத்தீவில் மலையாளம் பேசக்கூடிய இஸ்லாமியர்கள் தான்  அதிகம் தமிழர்களும், பழங்குடியின பூர்வகுடிகளும் நிறைந்த தீவு இது..

இந்நிலையில், இத்தீவில் நிர்வாக அதிகாரியாக பாஜகவை சேர்ந்த பிரபுல் கோடா படேலை ஒன்றிய பாஜக அரசு நியமித்தது. இவர் வந்தது முதலே லட்சத்தீவில் பல்வேறு கட்டுபாடுகளை விதித்தார்.

 

அதில், மதுவிலக்காக இருந்த லட்சத்தீவில் சுற்றுலாவை காரணம் காட்டி மதுபான கூடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் இத்தீவில் அவர்களின் முக்கிய உணவாக உள்ள மாட்டிறைச்சிக்கு தடை விதித்தார். இது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து பிரபுல் படேலின் நடவடிக்கைக்கு எதிராக பெரும் போராட்டங்கள் நடைபெற்றன. லட்சத்தீவை பாதுகாப்போம் என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டிங் ஆனது.

இந்த நிலையில், அடுத்த சர்ச்சையாக அங்கு வார விடுமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கு வெள்ளிக்கிழமை புனித நாள் என்பதால் வெள்ளி மற்றும் சனிக்கிழமை வார விடுமுறையாக இருந்து வந்தது. ஞாயிற்றுக்கிழமை வேலை நாளாகும். ஆனால் அதை தற்போது வெள்ளிக்கிழமைக்கு பதில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக லட்சத்தீவு கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், அனைத்து ஞாயிற்றுக்கிழமையும் இனி அரசு விடுமுறையாகும்.அனைத்து வெள்ளிக்கிழமைகளும் வேலை நாளாகும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து லட்சத்தீவு எம்பி முகம்மது பைசல் கூறுகையில், இந்தத் தீவில் பள்ளிகள் தொடங்கப்பட்ட நாள் முதலே வெள்ளிக்கிழமை விடுமுறையாகும்.சனிக்கிழமை அரை நாள் பள்ளிகள் நடைபெறும்.இதுதான் நடைமுறையாக இருந்தது. ஆனால் தற்போது யாருடனுன் கலந்து ஆலோசிக்காமல் விமுறை நாளை மாற்றியுள்ளனர்.

மக்களின் விருப்பத்திற்கு மாறான நடவடிக்கை இது.மக்களிடம் கலந்து ஆலோசிக்காமல் இப்படி ஒரு முடிவை எடுத்தது  தவறு என்றார்.

இந்த முடிவை திரும்பப் பெறுமாறு லட்சத்தீவு மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் பிபி அப்பாஸ், நிர்வாகி பிரபுல் கோடா படேலுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், மாணவர்கள், பெற்றோர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் எடுக்கப்பட்ட முடிவை திரும்பப்பெற வேண்டும் என்று கேட்டுள்ளார்.

லட்சத்தீவில் நடைபெற்று வரும் நடவடிக்கைகள் சங்-பரிவாரங்களின் நிகழ்ச்சி  நிரலாகவே பார்க்கப்பட வேண்டும்.மக்களின் கலாச்சாரம், மொழி, வாழ்க்கை முறை உணவு ஆகியவற்றை சங்-பரிவாரங்கள் தங்களுக்கு ஏற்ற வகையில் மாற்ற முயற்சிக்கிறது. மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதற்கும், கார்ப்பரேட்டுகளுக்கு பட்டுக்கம்பளம் விரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கார்ப்பரேட் நலன்களுக்கும், இந்துத்துவா அரசியலுக்கும் ஒரு பகுதி மக்களை அடிமைப்படுத்தும் இந்த முயற்சிக்கு எதிராக வலுவான எதிர்ப்பு எழுப்பப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

 

;