india

img

பீட்டாவுக்கு தடை விதிக்க கோரும் அமுல் நிறுவன துணைத்தலைவர்.... இந்தியாவுக்கு எதிராக சதி செய்வதாக குற்றச்சாட்டு....

அகமதாபாத்:
‘அமுல் இந்தியா’ நிறுவனம்,மாட்டுப் பால் உற்பத்தியைக் கைவிட்டு, வீகன் உணவுமுறைப்படி சோயா, பாதாம், தேங்காய் மூலமான பால் உற்பத்தியில் ஈடுபடவேண்டுமென- அமெரிக்காவைச் சேர்ந்த விலங்குகள் நலஅமைப்பான ‘பீட்டா’ அண்மையில் எழுதிய கடிதம் சர்ச்சையைஏற்படுத்தியது. 

வீகன் உணவுமுறைக்கு நாங் கள் மாறும்பட்சத்தில், இதனால் பாதிக்கப்படும் 10 கோடி பால்உற்பத்தியாளர்களுக்கு ‘பீட்டா’வேலை தருமா? என்று அமுல்நிறுவனத்தின் தலைவர் ஆர்.எஸ். சோதி கேள்வி எழுப்பினார். பீட்டா பரிந்துரையின் பின்னணியில், மரபணு மாற்றப்பட்ட சோயாவை இந்தியாவில் சந் தைப் படுத்தும் சதித் திட்டம் உள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.இந்நிலையில், பீட்டாஅமைப்பை ஒட்டுமொத்தமாகவே இந்தியாவில் தடை செய்யவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, ‘அமுல் இந்தியா’நிறுவனத்தின் துணைத் தலைவர் வலம்ஜி ஹூம்பால் கோரிக்கை விடுத்துள்ளார்.இந்தியாவில் இப்போதுவரை பால் உற்பத்தி மற்றும் அதுசார்ந்த பிற பொருள்களின் உற்பத்திகள் அனைத்தும், உள்நாட்டிலேயே நடக்கிறது.

வெளிநாட்டிலிருந்து அவற்றை பெறும் சூழல் இல்லை. இதனால் 10 கோடி மக்கள், வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இந்தியாவின் பொருளாதாரத்துக்கு பால்பொருட்கள் துறை பெரும் பங்களிப்பை வழங்கி வருகிறது. இந்நிலையில், இந்திய பால்முகவர்களின் இமேஜை கெடுக்கும் வகையில் பீட்டா போன்ற அமைப்புகள் மேற்கொள்ளும் தவறான பரப்புரைகளால், பால் விற்பனை பாதிக் கப்பட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பிலும் அது சரிவை ஏற்படுத்தி விடும். எனவே, பீட்டாபோன்ற நிறுவனங்களை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று வலம்ஜி ஹூம்பால் வலியுறுத்தியுள்ளார்.

;