india

img

பென்சில் விலை உயர்வால் சிரமம் - மோடிக்கு சிறுமி கடிதம்

பென்சில் ரப்பர் விலை உயர்வால் தான் சிரமப்படுவதாக 6-வயது சிறுமி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். 

மோடி அரசு பென்சில், ரப்பர் போன்ற எழுது பொருட்களுக்கு ஜிஎஸ்டியை 12 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றைத் தொடர்ந்து  மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்துள்ளநிலையில் பென்சில்கள், ரப்பர், சாக்பீஸ், கிரையான்ஸ் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வு குழந்தைகளுக்கும் கூட பெரும் நெருக்கடியை உருவாக்கி உள்ளது. 

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் கனூஞ் மாவட்டத்தில் சிப்ரமௌ பகுதியை சேர்ந்த க்ரீத்தி தூபே என்ற ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில், ”மோடிஜி நீங்கள் எல்லா பொருட்களின்  விலையையும் உயர்த்தி விட்டீர்கள். எனது பென்சில் ரப்பர் கூட விலை உயர்ந்த பொருளாக மாறி உள்ளது. என் உடன் படிக்கும் யாரேனும் பென்சிலை எடுத்துக் கொண்டால் என் அம்மா என்னை திட்டுகிறார். அடிக்கிறார். நான் என்ன செய்வது” என்று கேள்வி எழுப்பி உள்ளார். 

இந்த கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.    

;