india

img

உ.பி.யில் ஆக்சிஜன் கிடைக்காமல் எனது நண்பர்களே இறந்துவிட்டனர்..... ஆட்சியருக்கு கடிதம் எழுதிய பாஜக எம்எல்ஏ....

லக்னோ:
உத்தரப் பிரதேசத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என அம்மாநில அரசு தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், ஆக்சிஜன்பற்றாக்குறை குறித்து, அம்மாநிலபாஜக எம்எல்ஏ ஒருவரே ஆட்சியருக்கு கடிதம் எழுதியிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்,நாடு முழுவதுமே ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தில்லி, உத்தரப் பிரதேசம், காராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்சிஜன் கிடைக்காமல் நூற்றுக்கணக் கானோர் இறந்து போயினர்.இதுதொடர்பாக செய்திகள் வெளியான நிலையில், உத்தரப் பிரதேசத்தில் ஆக்சிஜன் சிலிண் டர்களுக்கு தட்டுப்பாடே இல்லை என்றும், மீறி யாராவது குற்றம் சாட்டினால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று முதல்வர் ஆதித்யநாத் மிரட்டினார். ஒருவர் மீது எப்.ஐ.ஆரும் போடப் பட்டது.இந்நிலையில், உ.பி. மாநில பாஜக எம்எல்ஏ ஒருவரே ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.

வக்கிம்பூர் கோல கோக்ரநாத்தொகுதி பாஜக எம்எல்ஏ-வான அரவிந்த் கிரி, ஆட்சியருக்கு எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 10 நாட்களில் மட்டும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகத் தனது நண்பர்கள் உட்பட 100-க்கும் மேற் பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மக்களை உயிரிழக்க விட்டுவிட வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். மற்றொரு பாஜகஎம்எல்.ஏ பிரதாப் சிங், கொரோனாஅபாயத்தைக் கருத்தில் கொண்டு,உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைக்க வேண்டும் என மாநில முதல்வருக்கும், தேர்தல் அதிகாரிக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

;