india

img

ராமர் கோயில் அறக்கட்டளையில் தொடரும் ஊழல் முறைகேடு.... நிர்வாண சாமியார் மஹந்த் தரம் தாஸ் அயோத்தி காவல்நிலையத்தில் புகார்....

லக்னோ:
ராமர் கோயில் அறக்கட்டளை ஊழல் முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும், இதுதொடர்பாக அறக்கட்டளை நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்சாமியார்கள் அமைப் பைச் சேர்ந்த மஹந்த் தரம்தாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அயோத்திகாவல் நிலையத்திலும் புகார் மனு ஒன்றையும் அளித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட் டும் பணிக்காக ராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளையை ஒன்றிய பாஜக அரசு அமைத்துள்ளது.இந்த அறக்கட்டளையானது, 110 ஏக்கர் பரப்பளவில் ராமர் கோயிலை கட்டுவதற்கு தீர்மானித்து,நாடு முழுவதும் சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கான நன் கொடையை பக்தர்களிடம் இருந்து வசூலித்துள்ளது.இதில், கோயில் கட்டுவதற்கான செலவினமாக ரூ. 1000 கோடியை ஒதுக்கியுள்ள அறக்கட்டளை, கோயிலை ஒட்டிய பகுதிகளில் இருக் கும் நிலங்களை ஏக்கர் கணக்கில் விலைக்கு வாங்கி வருகிறது. இதில்ஆரம்பம் முதலே ஊழல் முறைகேடுகள் அரங்கேறி வருகின்றன. 

அயோத்தி நகர ரயில் நிலையம் அருகிலுள்ள பிஜேஷ்வர் தோப்பில் குசும் பாதக், அவரது கணவர் ஹரீஷ்பாதக் ஆகியோருக்குச் சொந்தமான243, 244 மற்றும் 246 ஆகிய சர்வேஎண்களில் உள்ள சுமார் 3 ஏக்கர் நிலத்தை 18.5 கோடி ரூபாய்க்கு வாங்கியதில், அறக்கட்டளை உறுப்பினர்கள் ரூ. 16 கோடியே 50 லட்சம்பணத்தை முறைகேடு செய்தது கடந்த ஜூன் மாதம் பரபரப்பை ஏற்படுத்தியது.சுல்தான் அன்சாரி, ரவி மோகன் திவாரி என்பவர்கள் பெயரில் ரூ. 2 கோடிக்கு வாங்கப்பட்ட நிலம், அடுத்த ஐந்தே நிமிடங்களில் ரூ. 18 கோடியே 50 லட்சம் விலைக்கு ராமர் கோயில் அறக்கட்டளைக்கு மாற்றப்பட்டது. 

அறக்கட்டளையின் நிர்வாகக்குழு உறுப்பினரான டாக்டர் அனில்மிஸ்ரா மற்றும் அயோத்தியின் பாஜகமேயர் ரிஷிகேஷ் உபாத்யா ஆகியோர், ரியல் எஸ்டேட் புரோக்கர் களான அன்சாரி, ரவிமோகன் திவாரிஆகியோருடன் கூட்டுச் சேர்ந்து இந்தஊழல்முறைகேட்டை அரங்கேற்றியதும் ஆதாரப்பூர்வமாக அம்பலமானது.இதற்கு அடுத்ததாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டவிருக்கும் இடத்திற்கு மிகவும் அருகில் தசரதாமஹால் கோயில் மடத்திற்குச் சொந்தமான 676 சதுர மீட்டர் நிலத்தை,மடத்தின் தலைவர் மஹந்த் தேவேந் திர பிரசாத் ஆச்சார்யாவிடமிருந்து, பாஜக மேயர் ரிஷிகேஷ் உபாத்யாவின் மருமகன் தீப் நாராயண் ரூ. 20 லட்சத்திற்கு வாங்கி, அதனை ரூ.2 கோடியே 50 லட்சத்திற்கு ராம ஜென்மபூமி அறக்கட்டளைக்கு விற்றதும் சர்ச்சையைக் கிளப்பியது.“தாங்கள் விற்பனை செய்தது நஜூல் நிலம் ஆகும். ராமர் கோயிலுக்கு கேட்கிறார்களே என்பதால் 35 லட்சம் மதிப்பிலான நிலத்தை 20 லட்சத்திற்கு தர சம்மதித்தோம். ஆனால், தீப் நாராயண் அந்த நிலத்தை ரூ. 2.5 கோடிக்கு அறக் கட்டளைக்கு கைமாற்றியது எங்களுக்கு தெரியாது” என்று மடத்தின் தலைவர் மஹந்த் தேவேந்திர பிரசாத் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.அதைத்தொடர்ந்து பக்கீர் ராம் மடத்தின் நில மோசடியும் புதிய விவகாரமாக உருவெடுத்தது. இதுவும் அயோத்தியில்தான் உள்ளது. இந்த பக்கீர் ராம் கோயிலையும் அதன் மடத்தையும் விற்க முடியாது என்ற நிலையில், மடத்தின் தலைவரான மஹந்த் ராஜ்கிஷோர் சரண் அண்மையில் இறந்த பிறகு, கிருபாசங்கர்தாஸ், ராம் கிஷோர் சிங் என்ற இருவர் தங்களைத் தாங்களே அறக் கட்டளையின் புதிய நிர்வாகிகளாக அறிவித்துக் கொண்டு, தங்களின் பெயர், மார்ச் 26-இல் உ.பி. அரசு பதிவேட்டில் பதிவான மறுநாளே மடத்தையும் கோயிலையும் ஒருசேர ராமஜென்ம பூமி அறக்கட்டளைக்கு விற்று பரபரப்பை ஏற்படுத்தினர். 

இதுதொடர்பாக சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த், சிவசேனா மாநிலத் தலைவர் சந்தோஷ் துபே ஆகியோர் தொடர்ந்த வழக்கில் ராமஜென்ம பூமி அறக்கட்டளைக்கு நீதிமன்றம் நோட்டீஸூம் அனுப்பியது. இந்நிலையில்தான், சாமியார்கள் அமைப்பான நிர்வாணிஅகாடாவைச் சேர்ந்த மஹந்த் தரம் தாஸ், ராம ஜென்மபூமி காவல் நிலையத்தில், அறக்கட்டளைக்கு எதிராகபுகார் மனு ஒன்றை அளித்துள் ளார். அதில் ராமர் கோயில் அறக்கட் டளையின் ஊழல் முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.அதில், தசரதா மஹால் கோயில் மடத்திற்குச் சொந்தமான 676 சதுரமீட்டர் நஜூல் நிலம், கடந்த பிப்ரவரிமாதம் ரூ. 20 லட்சத்திற்கு வாங்கப் பட்டு, அது ராமர் கோயில் அறக் கட்டளைக்கு ரூ. 2 கோடியே 50 லட்சத்திற்கு விற்கப்பட்டதில் ஊழல்நடந்துள்ளதாகவும், இதுதொடர்பாகராமர் கோயில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் மற்றும் உறுப்பினர் அனில் மிஸ்ரா, அயோத்தி மேயரின் மருமகன் தீப் நாராயண், ராம் பலபாகுஞ்சின் ராஜ்குமார் தாஸ் மற்றும் துணைப் பதிவாளர் எஸ்.பி. சிங் உட்பட அறக்கட்டளையின் உறுப்பினர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இதுதொடர்பாக பேட்டி ஒன்றையும் அளித்துள்ள மஹந்த் தரம் தாஸ், அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பொறுப்பில் உள்ளராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராஅறக்கட்டளையின் உறுப்பினர்கள் ‘மோசடி செய்வதன் மூலம்’ மக்களையும் மற்றும் ராம பக்தர்களுக்கும் துரோகம் செய்து, அவர்களை ‘காட்டிக் கொடுத்து விட்டார்கள்’ என்று விமர்சித்துள்ளார். அறக் கட்டளையின் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து சம்பத் ராயை உடனடியாக நீக்க வேண்டும்; ராமர் கோயிலை நடத்தும் பொறுப்பை அயோத்தியில் உள்ள இந்து புனிதர்களிடம் விட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.நஜூம் நிலம் என்பது 1857-ம் ஆண்டு மீரட்டில் நடந்த சிப்பாய்கலகத்திற்கு பிறகு தோல்வி அடைந்த சிற்றரசுகளால் கைவிடப்பட்ட நிலங்களாகும். இவற்றை ஆங்கிலேய அரசு 1861-இல் நஜூல் நிலம்என்று வகைப்படுத்தி, தனித்துறையையும் உருவாக்கியது. இந்த துறை நஜூல் நிலங்களை பலருக்கு குத்தகைக்கு விட்டிருக்கிறது. இதனை அரசு மட்டுமே விற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

;