india

img

நீங்களல்ல; உங்கள் அப்பனே வந்தாலும் என்னைக் கைது செய்ய முடியாது..... மருத்துவர்களிடம் சவால்விட்ட சாமியார் ராம்தேவ்....

ஹரித்துவார்:
மத்தியில் தனக்கு சாதகமான பாஜக ஆட்சி நடக்கிறது என்ற தைரியத்தில், கார்ப்பரேட் சாமியார் ராம்தேவ் தொடர்ந்து அராஜகமாக பேசியும், நடந்தும் வருகிறார்.

அண்மையில் கொரோனா வுக்கு சிகிச்சை அளிக்கும் விஷயத்தில் நவீன அறிவியல் மருத்துவத்தையும், மருத்துவர்களை யும் மோசமான முறையில் அவர்சாடியது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.‘தடுப்பூசிகளின் இரண்டுடோஸ்களைப் போட்டுக் கொண்ட பிறகும் சுமார் ஆயிரம் மருத்துவர்கள் இறந்துள்ளனர். அப்படியிருக்க தங்களையே காப்பாற்றிக்கொள்ள முடியாதவர்கள் எப்படி மருத்துவர்களாக இருக்க முடியும்?’ என்று கேட்டதுடன், கொரோனா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் போன்ற மருந்து களால்தான் உயிரிழப்பே ஏற்படுகிறது என்றும் பரபரப்பைக் கிளப்பினார். இது கொரோனாவுக்கு எதிராக இரவு-பகலாக சிகிச்சையில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் - செவிலியர்களைக் கொந்த ளிக்க வைத்தது. மக்களிடம் பீதியைக்கிளப்பும் வகையில் பேசும் ராம்தேவை தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். ராம்தேவ் தனது பேச்சுக்கு 15 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லாவிட் டால் ரூ. 1000 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடரப்படும் என்று நோட்டீஸூம் அனுப்பினர்.

இந்நிலையில்தான், தன்னைக் கைது செய்ய வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் (IMA) எழுப்பியுள்ள கோரிக்கைக்கு பதிலளித்துள்ள சாமியார் ராம்தேவ், ‘என்னைக் கைது செய்ய வேண்டும் என்று பேசுபவர்கள் எல்லாம் வெறும் வாய்ப் பேச்சுக்காரர்கள்தான். அவர்கள் சத்தம் மட்டும்தான் போட முடியும். என்னைப் பற்றி பலவாறு அவதூறு பரப்பலாம், ஹேஷ்டேக் உருவாக்கி பிரச்சாரம் செய்யலாம். ஆனால் என்னைக் கைது செய்ய முடியாது. அவர்கள் அல்ல; அவர்களின் அப்பன்களே வந்தாலும் இந்த ராம்தேவைக் கைது செய்யமுடியாது’ என்று மிகுந்த ஆணவத்துடன் பேசியுள்ளார்.இதையடுத்து, நாடு முழுவதும் ‘அரெஸ்ட் ராம்தேவ்’ (#ArrestRamdev) என்ற ஹேஷ் டேக் சமூக வலைதளங்களில் டிரண்ட் ஆகி வருகிறது.

;