india

img

ஆகஸ்ட் 2 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளைத் திறக்க பஞ்சாப் அரசு உத்தரவு 

ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் பஞ்சாப் மாநிலத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளைத் திறக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

கொரோனா இரண்டாவது அலையின் காரணமாகக் கடந்த மார்ச் மாதத்தில் பஞ்சாபில் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. இந்நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு  குறைந்துள்ளதைத் தொடர்ந்து, பள்ளிகளைத் திறப்பது குறித்து மாநில அரசு ஆலோசனை நடத்தி வந்தது. 

அதன்படி வரும் திங்கட்கிழமை முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளைத் திறக்க பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது.  மேலும், பள்ளிகளில் கொரோனா 
விதிமுறைகள் பின்பற்றப்படுவதைக் கண்காணிக்க அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பஞ்சாபில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

;