india

img

இந்திய ரயில்வேயில் 3 லட்சத்திற்கும் அதிகமான காலி பணியிடங்கள்: ஒன்றிய அரசு

நாடு முழுவதும் இந்திய ரயில்வேயில் 3 லட்சத்திற்கும் அதிகமான காலி பணியிடங்கள் உள்ளதாக ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் காலியாக உள்ள ரயில்வே பணியிடங்கள் தொடர்பான மாநிலங்களவை உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நாடு முழுவதும் ரயில்வே துறையில் 3,01,750 காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார். மண்டல வாரியாக லெவல் ஒன் ( Non-Gazetted Group-C )  அதிகாரிகளுக்கான காலி பணியிடங்களில், சென்னை மண்டலத்தில் 4,271 காலி பணியிடங்களும், மதுரை மண்டலத்தில் 1,428 காலி பணியிடங்களும், திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் 2,268 காலி பணியிடங்களும், சேலம் மண்டலத்தில் 1,680 காலி பணியிடங்களும் உள்ளதாக  மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

;