சிக்கிம் மாநிலத்தில் லாச்சென் பள்ளத்தாக்கில் உள்ள தீஸ்தா ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் மாயமானார்கள்.
சுங்தாங் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் கீழணையில் 15 முதல் 20 அடி வரை நீர்மட்டம் உயர்ந்து.திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வெள்ளப்பெருக்கில் இராணுவ வீரர்கள் 23 பேர், பொது மக்கள் 20 பேர், சில ராணவ வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கியும், அடித்தும் செல்லப்பட்டன. NH-10 தேசிய நெடுஞ்சாலை நீரில் மூழ்கியுள்ளது.
இச்சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.