india

img

போலீசார் மீது கொலை முயற்சி வழக்கு போட்ட உ.பி. அரசு... யமுனையில் நீராடிய ஆர்எஸ்எஸ்காரர்களுடன் தகராறு செய்தார்களாம்...

மதுரா:
உத்தரப்பிரதேச மாநிலம், மதுராவின் பிருந்தாவனில் கும்பமேளாவையொட்டி ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ஒருவர் யமுனா நதியில் புனித நீராடிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. 

அப்போது அங்கே சென்ற போலீஸ்காரர்கள் சிலர், நீராடிக் கொண்டிருந்த ஆர்எஸ்எஸ்காரருடன் தகராறில் ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகிறது.இந்தப் பின்னணியில் போலீசாருக்கும், ஆர்எஸ்எஸ், பாஜக தொண்டர் களுக்கும் இடையே தகராறு ஏற் பட்டு, இதில் போலீஸ்காரரை, பாஜகதொண்டர் ஒருவர் தாக்கிய சம்பவம்அரங்கேறியது. இது தொடர்பான வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில்வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.ஆனால், போலீஸ்காரரைத் தாக்கிவிட்டு, ஏதோ தாங்கள் தாக்கப்பட்டதுபோல திடீரென ஆர்எஸ்எஸ் மற்றும்பாஜகவைச் சேர்ந்தவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். காவல்துறையினரை கைது செய்ய வேண்டும் என்று போராட் டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில்தான், மாநிலத்தை ஆளும் சாமியார் ஆதித்யநாத் தலைமையிலான உ.பி. அரசு, ஆர்எஸ்எஸ்,பாஜகவினரை விட்டுவிட்டு, தாக்குதலுக்கு உள்ளான காவல்துறையினர் மீதே கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்துள்ளது.காவல்துறை ஆய்வாளர் உபத் யாய், காவலர்கள் அனில், கவுதம் ஆகிய 3 பேரை பணியிடை நீக்கம் செய்திருப்பதுடன், மற்றொரு இன்ஸ்பெக்டரான அனுஜ்குமாரை இடமாற் றம் செய்துள்ளது. மேலும் தகராறில் ஈடுபட்ட ஊர்க்காவல் படை வீரர்கள் 2 பேர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கடிதமும் எழுதியுள்ளது. 

இதனிடையே போலீஸ்காரரை தாக்கிய பாஜக தொண்டர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆதித்யநாத்அரசை காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. பாஜக தொண்டர்களால் காவல்துறையினர் தாக்கப்பட்ட விதம் ஒட்டுமொத்த போலீசாரை மனச்சோர்வடையச் செய்துள்ளதாகவும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதில், காவல்துறையினரையே இடைநீக்கம் செய்து, கொலை முயற்சிகுற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்திருப்பது சட்டத்தின் ஆட்சிக்கு பொருத்தமானது அல்ல என்று காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் பிரதீப்மாத்தூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.