india

img

உ.பி.யில் ஜிதின் பிரசாதாவை அமைச்சராக்கும் பாஜக.... பிராமணர் வாக்குகள் கிடைக்காது என அச்சம்....

லக்னோ:
காங்கிரசிலிருந்து விலகிவந்த ஜிதின் பிரசாதா விரைவில் உத்தரப்பிரதேச அமைச்சர் ஆக்கப்படுவார்என்று செய்திகள் வெளியாகியுள்ளன.உத்தரப் பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் மூத்தத் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் ஜிதின் பிரசாதா. ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த இவர், மன்மோகன் சிங் ஆட்சியின் போது,ஒன்றிய அமைச்சராகவும் பதவி வகித்தவர். எனினும், அண்மைக் காலமாக ஜிதின் பிரசாதா கட்சிக்கு எதிராக செயல்படுவதாக காங்கிரசுக்கு உள்ளேயே விமர்சனம் எழுந்தது. காங்கிரசை புனரமைக்க வேண்டும் என்றுசோனியா காந்திக்கு கடிதம் எழுதிய23 மூத்த தலைவர்களில் (ஜி23) ஜிதின்பிரசாதாவும் ஒருவர் ஆவார். இதையொட்டி கடந்த ஜூன் மாதம் ஜிதின் பிரசாதா காங்கிரசிலிருந்து நீக்கப்பட் டார். அவரும் உடனடியாக பாஜகவில் இணைந்து கொண்டார். 

இந்நிலையில்தான், ஜிதின் பிரசாதாவுக்கு அமைச்சர் பதவி வழங்க பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜிதின் பிரசாதா பாஜக-வில் இணையும்போதே பிராமணர்களின் வாக்குகளை மனத்தில் வைத்துத் தான் பாஜக அவரைச் சேர்த்துக் கொண்டது. தற்போது, பிராமணர் என்பதற் காகவே அவரை அமைச்சராக்கவும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.உ.பி. மக்கள் தொகையில் சுமார் 10 சதவிகிதம் அளவிற்கு உள்ள பிராமணர்கள், ஆதித்யநாத் ஆட்சி மீதுஅதிருப்தியில் உள்ளனர். இந்த அதிருப்தியை அறுவடை செய்ய பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் தீவிரமாக வேலை செய்து வருகின்றன. இது பாஜகவுக்கு சிக்கலைஏற்படுத்தியுள்ளது. இதையடுத்தே பிராமணரான ஜிதின் பிரசாதாவை அமைச்சராக்கி, அதிருப்தியை சமாளிக்க திட்டமிட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் தற்போது 53 அமைச்சர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கைவிரைவிலேயே 60 உயர்த்தப்பட உள்ளது என்றும், 7 பேருக்கு புதிதாக அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.