india

img

மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்!

மக்களவை மற்றும் சட்டப்பேரவையில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை, மக்களவையில் இன்று சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் தாக்கல் செய்தார்.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் செப்டம்பர் 18-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் மக்களவை தொடங்கியது. மக்களவை மற்றும் சட்டப்பேரவையில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கான நேற்று ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில், இந்த மசோதாவை மக்களவையில் இன்று சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் தாக்கல் செய்தார். இந்த மசோதா நாளை விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே மசோதா அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.