india

img

வேலை உறுதித் திட்டத்தை சீரழிக்கும் ஒன்றிய அரசு பொருளாதார நிபுணர் பிரபாத் பட்நாயக் கடும் விமர்சனம்

புதுதில்லி மக்களின் அதிகாரத்தை பறிப்பதே அனைத்து பாசிச அரசுகளின் நோக்கம். மோடி அரசும் இதற்கு விதி விலக்கல்ல என்று புகழ்பெற்ற பொ ருளாதார நிபுணர் பேராசிரியர் பிரபாத் பட்நாயக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,“மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை (MGNREGS) முறையாக செயல்படுத்தாமல், அதை திட்டமிட்டு சீரழிக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடு பட்டு வருகிறது. பாஜக அரசு பெண் களுக்கு பண உதவி வழங்க தயாராக உள்ளது. மகாராஷ்டிரா தேர்தலில் இது வெற்றியையும் பெற்றுத் தந்தது. ஆனால் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை அழிக்க முயற்சிக்கிறது. காரணம் பண உதவி என்பது அரசின் தயவு. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் ஒரு சட்டப்பூர்வ உரிமை ஆகும்.

ஐந்து வழிகளில் சீரழிப்பு

ஒன்றிய அரசு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஐந்து முக்கிய வழிகளில் சீரழித்து வரு கிறது. தேசிய மொபைல் கண்கா ணிப்பு முறை மற்றும் ஆதார் கட்டா யம் காரணமாக 6.7 கோடி தொழி லாளர்கள் திட்டத்திலிருந்து விலக் கப்பட்டுள்ளனர். இணைய வசதி இல்லாத கிராமப்புறங்களில் இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்வது மிகவும் கடினமான ஒன்று ஆகும்.

எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்க ளுக்கு குறிப்பாக மேற்கு வங்கத்தி ற்கு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட நிதி மறுக்கப்படுகிறது. ஊழலை காரணம் காட்டி நிதி மறுக்கப்படுகிறது. ஆனால் சமூக தணிக்கைக்கான நிதியையே ஒன்றிய அரசு வழங்குவதில்லை.

மூன்று ஆண்டு கால ஊதிய நிலுவை

தில்லியில் நடந்த போராட் டத்தில் பல தொழிலாளர்கள் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகே ஊதியம் பெற்றதாக புகார் தெரிவித்தனர். தாமதத்திற்கான இழப்பீடு மற்றும் வேலையின்மை உதவித்தொகை எதுவும் வழங்கப்படவில்லை.

குறைந்த நிதி ஒதுக்கீடு

2024-25ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் ரூ.86,000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. நிலு வைத் தொகையை கழித்தால் ரூ.60,000 கோடி மட்டுமே மிஞ்சும். கொரோனா காலத்தில் ரூ.1,13,000 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது தொழிலாளர்கள் தரப்பில் ரூ.2.5  லட்சம் கோடி ஒதுக்கீடு கோரப் படுகிறது.

குறைந்த ஊதியம்: ஆய்வு அறிக்கை

பெரும்பாலான மாநிலங்களில் தினசரி ஊதியம் ரூ.200-300 மட்டுமே வழங்கப்படுகிறது. ஹரி யானா, கேரளா, கர்நாடகா, பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களில் மட்டுமே ரூ.300க்கு மேல் ஊதியம் வழங்கப் படுகிறது.

ஒன்றிய அரசின் நிபுணர் குழுவே ரூ.375 ஊதியம் பரிந்துரைத்துள்ளது. ஆனால் 5 பேர் கொண்ட குடும்பத்திற்கு குறைந்தபட்சம் ரூ.410 தேவைப்படுகிறது.

திட்டக்குழுவின் 2011-12 கணக் கீட்டின்படி 2200 கலோரி உணவுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.50 தேவைப்பட்டது. தற்போதைய விலைவாசியில் இது ரூ.82 ஆக உயர்ந்துள்ளது. கல்வி, மருத்துவம் தனியார்மயமாக்கப்பட்டதால் செலவு மேலும் அதிகரித்துள்ளது.

தில்லி போராட்டம்

டிசம்பர் 6 அன்று தில்லியில் நடந்த தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் திட்டத்தை விரிவுபடுத்தவும், ரூ.2.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யவும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதே போல மூன்று ஆண்டு கால ஊதிய நிலுவை பிரச்சனையும் முன்வைக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவின் மிக முக்கியமான சட்டங்களில் ஒன்றான தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை, தற்போதைய அரசு திட்டமிட்டே சீரழிக்கிறது. மக்களை வெறும் நலத்திட்ட பயனாளிகளாக மாற் றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

நிபுணர்கள் கருத்து

வேலைவாய்ப்பு உறுதி, கிரா மப்புற வாழ்வாதாரம், பொருளா தார பாதுகாப்பு, சமூக நீதி ஆகிய வற்றை உறுதி செய்யும் இந்த திட்டத்தின் முக்கியத்துவத்தை பொருளாதார வல்லுநர்கள் தொ டர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்” என பொருளாதார நிபுணர் பிரபாத் பட்நாயக் சுட்டிக்காட்டியுள்ளார்.