புவனேஸ்வரம் ஒடிசா மாநிலத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் பதிவான வாக்குகளில் மிகப்பெரிய வேறுபாடு இருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் பிஜு ஜனதா தளம் கட்சி நேரில் புகார் அளித்துள்ளது.
இதுதொடர்பான புகார் மனுவில், “ஒடிசாவில் வாக்குப்பதிவு நடத்தப் பட்ட நாளில் இரவு 11.45 மணிக்கு வெளியிடப்பட்ட பதிவான வாக்குக ளும், அதன்பிறகு தேர்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி எண்ணிக்கைக்கும் 10 சதவீத வாக்குகள் வித்தியாசம் உள்ளது. குறிப்பாக பாஜகவின் முதல்வராக உள்ள மோகன் சரண் மாஜி வென்ற தொகுதியில் வாக்குப் பதிவு நிறைவடைந்த போது பதி வான வாக்கு சதவீதத்திற்கும், எண் ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே 30.64 சதவீத வித்தியாசம் உள்ளது. இதே போல பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகளை விட மொத்த வாக்குகளின் எண்ணிக் கை மிக அதிகமாக உள்ளது. இது தேர்த லின் முடிவையே மிக மோசமான அளவில் பாதிக்கும்.
பதில் இல்லை
தேர்தல் நடத்தும் அலுவலரால் எண்ணப்பட்ட வாக்குகளின் எண் ணிக்கையும் மாவட்ட தேர்தல் அதி காரி அளித்த அறிக்கையில் உள்ள எண்ணிக்கையும் பெரிய அளவில் மாறுபட்டு இருப்பது ஏன்? தனியாக வாக்குச் சாவடிகளில் எத்தனை வாக்குகள் பதிவாகின என்பதை அறிவதற்காக மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் 17-சி படிவத்தை தகவல் அறியும் உரிமை சட்டம் மூல மாகவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மூலமாகவும் கேட்ட போதும் இது வரை தங்களுக்கு பதில் கிடைக்க வில்லை. இந்தியாவிலேயே மிகப் பெரிய வாக்கு சதவீத வேறுபாடு களோடு ஒடிசா தேர்தல் நடந்துள்ளது. 2004-ஆம் ஆண்டு தேர்தலில் பதிவான வாக்குகள் மற்றும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கு இடையே 2 சதவீதம் வித்தியாசம் மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது 30 சதவீதத்தை தாண்டியது எப்படி?” என பிஜு ஜனதா தளம் கட்சி கேள்வி எழுப்பி யுள்ளது.