வக்பு வாரிய திருத்தச் சட்டத்தின் சில விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்துள்ளது.
ஒன்றிய அரசு கொண்டுவந்த வக்பு திருத்தச் சட்டம் கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி அமலுக்கு வந்தது. இதையடுத்து இந்த சட்டத்தின் மூலம் இஸ்லாமியர்களின் உரிமைகள் பறிக்கப்படும் எனவும், சட்டத்தை ரத்து செய்யக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், வக்பு வாரிய திருத்த சட்டத்தின் கீழ் எந்த நியமனங்களையும் மேற்கொள்ள கூடாது என ஏற்கனவே இடைக்கால உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று மேலும் சில பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. வக்பு ஒன்றை உருவாக்க, ஒருவர் 5 ஆண்டுகள் இஸ்லாமிய மதத்தை பின்பற்றுபவராக இருக்க வேண்டும் என்ற பிரிவுக்கும், வக்பு நிலம் தொடர்பாக முடிவெடுக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் தரும் பிரிவுக்கும் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும், மத்திய வக்பு வாரியத்தில் நான்குக்கும் மேற்பட்ட முஸ்லீம் அல்லாதோரை சேர்ப்பது, மாநில வக்பு வாரியங்களில் மூன்றுக்கும் மேற்பட்ட முஸ்லீம் அல்லாதோரைச் சேர்ப்பதற்கும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.