games

img

விளையாட்டு

ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப்பில்  தங்கம் வென்று வரலாறு படைத்த தமிழ்நாடு வீரர்

சீனாவின் பெய்டைஹே நக ரில் உலக அதிவேக ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடை பெற்று வருகிறது. இந்த தொடரில் ஆடவர் சீனியர் 1,000 மீ ஸ்பிரின்ட் பிரிவில் இந்தியா சார்பில் களமிறங்கிய ஆனந்த்  வேல்குமார் 1 நிமிடம் 24.924 வினாடிகளில் இலக்கைக் கடந்து தங்கப்பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.  ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ள  22 வயதான ஆனந்த்  வேல்குமார் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். சென்னை கிண்டியில் உள்ள பொறி யியல் கல்லூரியில் கணினி அறிவியல் படித்து வருகிறார். அவரது மூத்த சகோ தரி சுபி சுவேதா வேல்குமாரும் ஒரு இந்திய ஸ்கேட்டிங் வீராங்கனை ஆவர். சீனாவில் நடைபெற்று வரும் இந்த ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை ஆனந்த் வேல்குமாரோடு நிற்கவில்லை ஜூனியர் 1,000 மீ  ஸ்பிரின்ட் பிரிவிலும் இந்தியாவின் கிரிஷ் ஷர்மா வும் தங்கப்பதக்கம் வென்று அசத்தி யுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கைக்குலுக்காமல் சென்ற விவகாரம்  பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய கோரிக்கையை ஐசிசி நிராகரிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் “குரூப் ஏ” பிரிவுப் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. டாஸ் போடும் போதும், போட்டி முடிந்த பின்பும் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களிடம் கைக்குலுக்காமல் நேராக அறைக்குத் திரும்பினர். ஒன்றிய அரசு மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவின் பேரில் பாகிஸ்தான் வீரர்களிடம் கைக்குலுக்காமல் இந்திய வீரர்கள் அறைக்குச் சென்றனர். இந்நிலையில், இந்திய வீரர்களின் செயல் விதிமீறல் என்றும், கைக்குலுக்க மறுத்த விவகாரத்தில் போட்டி நடுவர் (MATCH REFREE) ஆன்டி பைகிராப்டை நடப்பு ஆசியக்கோப்பை தொடரில் இருந்து நீக்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் (ஐசிசி) பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) கோரிக்கை விடுத்தது. குறிப்பாக கோரிக்கையில்,”டாஸின் போது இந்திய கேப்டன் சூர்ய குமாருடன் கைக்குலுக்க வேண்டாம்” என பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகாவிடம் நடுவர் ஆன்டி பைகிராப்ட்  (ஜிம்பாப்வே) அறிவுறுத்தியதாக பிசிபி குற்றம்சாட்டியுள்ளது. இத்தகைய சூழலில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை  ஐசிசி நிராகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய பிரதமருக்கு ஜெர்ஸி பரிசளித்த மெஸ்ஸி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது 75ஆவது பிறந்தநாளை புதனன்று கொண்டாட உள்ளார். இந்த பிறந்த நாளை முன்னிட்டு தனது கையொப்ப மிடப்பட்ட ஜெர்ஸியை (உடை - 2022 உலகக்கோப்பையில் விளையாடியது) அன்பளிப்பாக அனுப்பியுள்ளார் கால்பந்து  உலகின் நட்சத்திர வீரரும், அர்ஜெண்டினா கேப்டன் லயோனல் மெஸ்ஸி. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் மெஸ்ஸி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், மோடிக்கு அவர் ஜெர்ஸி பரிசாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.