games

img

விளையாட்டு

ஆசியக்கோப்பை கிரிக்கெட் இந்தியா - வங்கதேசம் இன்று பலப்பரீட்சை

17ஆவது சீசன் ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடரில் “சூப்பர் 4” சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், புதன்கிழமை அன்று நடைபெறும் 4ஆவது “சூப்பர் 4” சுற்று ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்தியா - வங்கதேசம் இடம் : துபாய் சர்வதேச மைதானம் நேரம் : இரவு 8 மணி சேனல் : சோனி ஸ்போர்ட்ஸ், சோனி லைவ் (ஓடிடி)

ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு : யுவராஜ் சிங் ஆஜர்

ஆன்லைன் சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்துவதன் மூலம் பெரிய அளவிலான பரிவர்த்தனைகள்,  பணமோசடியுடன் தொடர்புடைய வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் “ஒன்எக்ஸ்பெட் (1xBet)” என்ற சட்டவிரோத பந்தய செயலியுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கு விசாரணையின் பகுதியாக அமலாக்கத்துறை கடந்த வாரம் இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர்களான யுவராஜ் மற்றும் ராபின் உத்தப்பாவுக்கு சம்மன் அனுப்பியது. இவர்களில் ராபின் உத்தப்பா திங்களன்று விசாரணைக்கு ஆஜராகினார். தொடர்ந்து யுவராஜ் சிங் செவ்வாய்க்கிழமை அன்று காலை அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜராகினார்.

பிரான்ஸ் வீரருக்கு  பலோன் டி ‘ஆர் விருது  அய்டானா பொன்மாட்டி ஹாட்ரிக்

கால்பந்து உலகின் மிக உயரிய விருதான பலோன் டி ‘ஆர் விருதை சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கு வருடந்தோறும் சர்வதேச கால்பந்து சம்மேளனம் வழங்கி வருகிறது. 1956ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வரும் நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான பலோன் டி ‘ஆர் விருதை 28 வயதான பிரான்ஸ் வீரர் டெம்பலே வென்றார். கிளப் போட்டிகளில் பிஎஸ்ஜி அணிக்காக 2024-25  சீசனில் சிறந்த ஆட்டத்தை டெம்பலே வெளிப்ப டுத்தினார். 53 போட்டிகளில் 35 கோல்களை அவர் கடந்த சீசனில் பதிவு செய்துள்ளார். அதே போல சிறந்த கால்பந்து வீராங்கனைக் கான பலோன் டி ‘ ஆர் விருதை ஸ்பெயினின் அய்டானா  பொன்மாட்டி வென்றார். தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக அவர் விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிரெண்டிங் போட்டோ டென்னிஸ் பிரிவின்

முக்கிய சர்வதேச போட்டியான “லேவர் கோப்பை” ஆண்டுதோறும் நடைபெறுகிறது. ஐரோப்பிய கண்டத்தைச் சேர்ந்த நாடுகளின் வீரர்கள் ஐரோப்பிய அணியிலும், இதர நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் உலக அணியிலும் விளையாடுவார்கள் என்ற நிலையில், இந்த தொடரின் 8ஆவது சீசன் அமெரிக்காவில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், ஐரோப்பிய அணியில் தலைசிறந்த நட்சத்திரங்கள் இருந்த பொழுதிலும், உலக அணி 15-9 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. உலக அணிக்கு இது 3ஆவது கோப்பையாகும்.

புரோ கபடி 2025 :

இன்று விடுமுறை புரோ கபடி தொடருக்கு புதன்கிழமை விடுமுறை நாளாகும். தொடர்ந்து  வியாழக்கிழமை அன்று இடம் மாற்றம் இல்லாமல் ஜெய்ப்பூரின் (ராஜஸ்தான்) சவாய் மான் சிங் மைதானத்தில் நடைபெறுகிறது.