india

img

சமையல் எண்ணெய் இறக்குமதி மீதான 2.5 சதவீத சுங்கவரி நீக்கம் – ஒன்றிய அரசு  

சமையல் எண்ணெய்கள் இறக்குமதிக்கு விதிக்கப்படும் 2.5 சதவீத சுங்கவரி முற்றிலும் நீக்கப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது.

புதுடெல்லி - பெட்ரோல், டீசல் விலை உயர்வை போன்றே இந்தியாவில் சமையல் எண்ணெய்களின் விலையும் உச்சத்தை தொட்டு வருகிறது. இந்நிலையில் அத்தியாவசிய தேவையான பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன் எண்ணெய் இறக்குமதி மீதான 2.5 சதவீத சுங்கவரி நீக்கப்பட்டுள்ளது. மேலும் சமையல் எண்ணெய்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் ஒன்றிய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.