மாநிலங்களையில் காலியாக இருக்கும் 19 எம்.பி இடங்களுக்கான தேர்வு இன்று நடைபெற்று வருகிறது.
கடந்த பிப்ரவரியில், 17 மாநிலங்களில் 55 இடங்களை நிரப்புவதற்கான தேர்தலை ஆணையம் அறிவித்தது. மார்ச் மாதத்தில், தமிழகம் உட்பட 10 மாநிலங்களில் 37 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள 18 இடங்களுக்கு கடந்த மார்ச் மாதம் நடைபெறுவதாக இருந்த தேர்தல், கோவிட்-19 பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆந்திரா மற்றும் குஜராத்திலிருந்து தலா 4 இடங்களும், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானிலிருந்து இருந்து தலா 3 இடங்களும், ஜார்க்கண்டிலிருந்து 2 இடங்களும், மிசோரம், மேகாலயா மற்றும் மணிப்பூரிலிருந்து தலா ஒரு இடமும் என மொத்தம் 19 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தல் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. இந்த தேர்தலின் முடிவுகள் மாலை 5 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளன.