india

புதிய கொரோனா மரபணு பகுப்பாய்வு: ஒன்றிய அரசு தகவல்

புதுதில்லி, ஏப்.10- ‘ஒமைக்ரான் எக்ஸ்இ’ என்ற புதிய கொரோனா மரபணு வின் பகுப்பாய்வு நடந்து வருவதாக ஒன்றிய அரசு தெரி வித்துள்ளது. இங்கிலாந்தில் ஒமைக்ரான் பிஏ.1, பிஏ.2., வைரஸ்களின் கலப்பினமாக ‘ஒமைக்ரான் எக்ஸ்இ’ என்ற வைரஸ் உரு வாகி உள்ளது. இது இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ், ஒமைக்ரான் வைரசை விட அதிவேகமாக பரவக்கூடியது ஆகும். அதே நேரத்தில் இதுவரை இந்த வைரஸ் ஆபத்தானதாக இல்லை.  இந்த நிலையில் இந்தியாவில், மும்பையில் இருந்து வதோதராவுக்கு (குஜராத்) சென்ற ஒருவருக்கு இந்த புதிய வகை வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.இந்த ‘ஒமைக்ரான் எக்ஸ்இ’ வைரஸ் மாதிரியின் மரபணு பகுப் பாய்வு பரிசோதனை நடந்து வருகிறது. இதன் முடிவுகள் விரைவில் தெரிய வரும் என்று ஒன் றிய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.