புதுதில்லி இந்திய நாட்டின் அஞ்சல் துறை யில் 200 ஆண்டுகளாக உள்ள முக்கிய சேவையான புத்தக அஞ்சல் (Book Post) சேவையை மோடி அரசு திடீரென நிறுத்தியுள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வாசிப்பு கலாச்சாரத்தை ஊக்கு விக்கும் நோக்கத்தில் துவங்கப்பட்ட இந்த புத்தக அஞ்சல் சேவையின் கீழ் வாடிக்கையாளர்கள் 5 கிலோ புத்த கங்களை சலுகை கட்டண அடிப்படை யில் வெறும் 80 ரூபாய்க்கு அனுப்பிக் கொள்ளலாம்.
இந்த சேவை புத்தக வெளி யீட்டாளர்களுக்கு விலையுயர்ந்த கூரியர் சேவைகளுக்கு மாற்றாக மிகச் சிறந்த சேவையாக இருந்தது. மேலும் மானிய விலைகள் பத்திரிகைகள் மற்றும் பருவ இதழ்களும் புத்தக அஞ்சல் சேவையை பயன்படுத்தி வாசிப்பு கலாச்சாரத்தை ஊக்கு வித்தன.
இந்நிலையில், டிசம்பர் 18ஆம் தேதி முதல் எவ்வித முன்னறிவிப்பின்றி புத்தக அஞ்சல் சேவையை திடீ ரென நிறுத்தி வைத்தது இந்திய அஞ்சல் துறை. ஒன்றிய தகவல் தொடர்பு துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரி லேயே இந்த நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டதாக இந்திய அஞ்சல் துறை விளக்கம் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
1 கிலோ எடையுள்ள புத்தக பார் சலை, புத்தக அஞ்சல் மூலம் அனுப்ப ரூ.32 மட்டுமே செலவாகும். ஆனால் அதே எடைக்கு புத்தக அஞ்சல் சேவை அல்லாத மற்ற பார்சல் சேவை மூலம் ரூ.78 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதேபோல் 2 கிலோவுக்கு புத்தக அஞ்சல் மூலம் ரூ.45 ஆகவும், 5 கிலோ பார்சலுக்கு புத்தக அஞ்சல் மூலம் ரூ.80 ஆகவும் இருந்தது. தற்போது புத்தக அஞ்சல் சேவை அல்லாத பார்சல் மூலம் ரூ.229 ஆக அதிகரிக்கின்றது. புத்தக அஞ்சல் சேவை நிறுத்தப்பட்ட தால் இனி வெளியீட்டாளர்கள் புத்த கங்களை அனுப்புவதில் கடும் பிரச்ச னையையும், வாடிக்கையாளர்களிடம் மோதலை எதிர்கொள்ளும் சூழல் உருவாகும்.
கண்டனம்
புத்தக அஞ்சல் சேவையை நிறுத்திய மோடி அரசின் இந்த நட வடிக்கை எழுத்தறிவு, கல்வி மற்றும் அறிவுசார் வளர்ச்சியை தடுக்கும் என கல்வியாளர்கள், விமர்சகர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அதே போல கல்வி மற்றும் வாசிப்பு கலாச்சாரத்தின் மேம்பாட்டுக்கான இந்தியாவின் அர்ப்ப ணிப்புக்கு இது பின்னடைவாக பார்க்கப் படுகிறது என நாடு முழுவதும் கண்ட னங்கள் குவிந்து வருகின்றன.