ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை இணையதளத்தில் தாமதமாக பதிவேற்றபடுவதாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய கடிதத்தில், காலை 9 மணி முதல் 11 மணி வரை ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை இணையதளத்தில் தாமதமாக பதிவேற்றபட்டதாகவும், இதனால் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், எனவே தேர்தல் முடிவுகளை உடனடியாக பதிவேற்றம் செய்ய உத்தரவிடவும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த புகாருக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. அனைத்து தொகுதிகளிலும் வாக்குகள் எண்ணப்பட்டு 5 நிமிடங்களுக்கு ஒரு முறை பதிவேற்றம் செய்யப்படுவதாக விளக்கம் அளித்துள்ளது.