india

img

வேலை நேரத்தை மாற்றியமைக்க அறிவுறுத்தல்

நாட்டின் பல பகுதிகளுக்கு கடும் வெயில் அடிக்கும் நிலையில் தொழிலாளர்களின் பணி நேரத்தை மாற்றியமைக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய அரசின் தொழிலாளர் நல அமைச்சகம் கடிதம்.
  கடும் வெயில் காரணமாக தொழிலாளர்களின் பணி நேரத்தை மாற்ற ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் ஒன்றிய தொழிலாளர் நலத்துறை செயலாளர் ஆர்த்தி அஹுஜா கடிதம் அனுப்பியுள்ளார். சிறு மற்றும் பெரு நிறுவங்கள் உள்ளிட்டவை பணி நேரத்தை மறுநிர்ணயம் செய்ய ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதிகரித்து வரும் வெயிலால் தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது
கட்டுமான தொழிலாளர்கள் உள்பட திறந்த வெளியில் பணியாற்றுபவர்களின் பணி நேரத்தை மாற்றி அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டுமான தொழிலாளர்கள், செங்கல் சூளை தொழிலாளர்கள், சுரங்கத்தில் பணியாற்றுபவர்களை கவனத்தில் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டுமான தொழிலாளர்கள் உள்ள பகுதிகளில் அவசர கால ஐஸ் பேக், வெப்பநோய் தடுப்பு மருந்துகளை வைக்கவும், சுரங்க பணிகள் நடைபெறும் இடங்களில் போதிய குடிநீர் மற்றும் ஓய்வு எடுக்க தற்காலிக அறைகள் அமைக்கவும் அறிவுத்தப்பட்டுள்ளது. உடல்நிலை சரியில்லாத ஊழியர்களுக்கு வேலைபளு அதிகம் வழங்கக் கூடாது என்பதை உறுதி செய்யவேண்டும் என ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.