india

img

இண்டிகோ நிறுவனத்திற்கு சிறந்த உள்நாட்டு விமான சேவை நிறுவன விருது

இண்டிகோ நிறுவனத்திற்கு சிறந்த உள்நாட்டு விமான சேவை நிறுவன விருதை இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைப்புகளின் கூட்டமைப்பு வழங்கியுள்ளது.

டெல்லியில், பயணம் மற்றும் சுற்றுலாத்துறை சிறப்பு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சுற்றுலாத்துறையில் புதுமையான முயற்சிகள் மற்றும் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் ஒரு கட்டமாக, விருதுகள் வழங்கும் விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவில், இண்டிகோ நிறுவனத்திற்கு சிறந்த உள்நாட்டு விமான சேவை நிறுவன விருது வழங்கப்பட்டது.