india

img

சாலை விபத்து உயிரிழப்புகளில் இந்தியா முதலிடம்!  

உலகளவில் ஒப்பிடுகையில் சாலை விபத்துகளில் அதிக பேர் உயிரிழக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல்கள் தெரிவித்துள்ளது.  

அதிகவேகம், தரமற்ற சாலைகள், சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் இருப்பது, மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவது, தரமற்ற வாகனங்கள் போன்ற காரணங்களினால் பொதுவாக சாலை விபத்துக்கள் நடக்கிறது. இதனால் பலர் பலியாகும் நிகழ்வுகள், தொடர்ந்து நம் கண்முன்னே நடந்து கொண்டு இருக்கிறது.  

இந்நிலையில் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் நிதின் கட்கரி கூறியதாவது, ஜெனிவாவில் உள்ள சர்வதேச சாலை கூட்டமைப்பு வெளியிட்டுள்ள உலக சாலை புள்ளிவிவரங்கள், 2018-ன் சமீபத்திய இதழின் அடிப்படையில், விபத்துகளின் எண்ணிக்கையில் இந்தியா 3ஆவது இடத்திலிருந்தது.  

தற்போது, சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்திலும், காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கையில் 3ஆவது இடத்திலும் உள்ளது என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.  

மேலும், 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் சாலை விபத்துகள் மூலம் உயிரிழப்பவர்களின் இறப்பு விகிதம் 69 சதவீதமாக உள்ளது. 2020 ஆம் ஆண்டில் சாலை விபத்துகள் மூலம் உயிரிழப்பவர்களின் இறப்பு விகிதம் 80 சதவீதமாக இருந்ததாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.