ஜெருசலேம்:
இஸ்ரேல் நாட்டின் பிரபல பீர் தயாரிப்பு நிறுவனம், தனது பீர் பாட்டில்களின் மேல், மகாத்மா காந்தியின் புகைப் படத்தை அச்சிட்டு இருந்தது. அதாவது, வாழ்நாள்முழுவதும் மதுவுக்கு எதிராகவே இருந்த காந்தியின் படம் பீர் பாட்டிலில் ஒட்டப்பட்டது. இதற்கு, உலகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக,இந்திய நாடாளுமன்றத்திலும் இது விவாதமானது. இதையடுத்து, காந்தியின் படத்தை பொறித்ததற்காக, இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்கிறோம் என்ற சம்பந்தப் பட்ட பீர் நிறுவனம் அறிவித்துள்ளது. படத்தை நீக்குவதாகவும் அறிவித்துள்ளது.