india

img

‘யெஸ்’ வங்கி பிரச்சனைக்கு ரிசர்வ் வங்கிதான் காரணம்... ஆர்எஸ்எஸ் சொல்கிறது

புதுதில்லி:
‘யெஸ் வங்கி’ விவகாரத்திற்கு, ரிசர்வ் வங்கியின் தவறான நிர்வாகமே காரணம் என்றும், ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு ரிசர்வ் வங்கியே பொறுப்பேற்க வேண்டும் எனவும் ஆர்எஸ்எஸ் கூறியுள்ளது.ஆர்எஸ்எஸ் பரிவாரங்களில் ஒன்றான ‘சுதேசி ஜாக்ரான் மன்ச்’ (எஸ்.ஜே.எம்) அமைப்பின் தலைவர் அஸ்வினி மகாஜன், ஆங்கில இணைய ஊடகத்திற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“சரியான நேரத்தில் தலையிடாததால், ‘யெஸ் வங்கி’யின் தோல்விக்கு சம்பந்தம் இல்லை என ரிசர்வ் வங்கி கைகளை கழுவமுடியாது. ரிசர்வ் வங்கி இந்த விவகாரத்தில் முன்பே தலையிட்டு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தினசரி மற்றும் வாராந்திரஅடிப்படையில் வங்கிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும் வழிமுறைகள் இருப்பதால், ரிசர்வ் வங்கி மவுனமாக ஒருபார்வையாளராக நடந்து கொள்ளக் கூடாது”என்று கூறியுள்ளார்.“கடந்த சில ஆண்டுகளில் ‘யெஸ் வங்கி’யின் கடன்கள் அளவு 30 சதவிகிதத்திற்கு மேல் உயர்ந்தபோது, ஏன், ரிசர்வ் வங்கியால் இந்த பிரச்சனையை கண்டுபிடிக்க முடியவில்லை?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.