புதுதில்லி, நவ. 4 - கேரளம், பஞ்சாப் மற்றும் உத்தரப்பிர தேச மாநில சட்டப்பேரவைகளில் காலி யாக உள்ள 14 இடங்களுக்கான இடைத் தேர்தல் தேதியை மாற்றி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நவம்பர் 13 அன்று பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படவுள்ள கார ணத்தால், வாக்குப்பதிவுத் தேதியை மாற்றியமைக்குமாறு அரசியல் கட்சி களும், சமூக அமைப்புகளும் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்ததாகவும், அந்தக் கோரிக்கையை ஏற்று, கேரள மாநிலம் பாலக்காடு, பஞ்சாப் மாநிலம் தேரா பாபா நானக், சப்பேவால், பர்னாலா மற்றும் கிட்டெர்பாஹா ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 13ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்தல், நவம்பர் 20-ஆம் தேதிக்கு மாற்றிய மைக்கப்பட்டு உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதேபோல், உத்தரப் பிரதேச மாநி லத்தின் மீராப்பூர், காசியாபாத், கர்ஹல் உள்பட 9 சட்டப்பேரவை தொகுதி களுக்கான வாக்குப்பதிவும் நவம்பர் 20-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு சட்ட மன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை மாற்றியமைத்துள்ள தேர்தல் ஆணையம், அதே கேரளத்திலுள்ள வயநாடு மக்களவைத் தொகுதிக்கும், செலக்கரா சட்டமன்றத் தொகுதிக்கும் திட்டமிட்டபடி நவம்பர் 13-ஆம் தேதியே இடைத்தேர்தல் நடைபெறும் என கூறியுள்ளது.