சமோலி, பிப்.07- உத்தரகாண்டில் தெளளிகங்கா வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தின் தபோவன் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவைத் தொடர்ந்து தெளளிகங்கா ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் ஆற்றின் கரையோரம் அமைந்திருந்த பல வீடுகள் சேதமானதோடு, பலர் மாயமாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளப்பெருக்கை தொடர்ந்து அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.