டிசம்பர் 8ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் 9வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் உறுதியான முடிவுகள் எட்டப்படாத நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டிசம்பர் வரும் 8ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) அழைப்பு விடுத்துள்ளனர்.