india

img

சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள சிபிஎம் தலைவர்கள்!

சிபிஎம் தலைவர்கள் ஆறு பேர் அடங்கிய குழு நேற்று இரவு சீனாவுக்கு புறப்பட்டு சென்றுள்ளது.

சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி தலைமையிலான 6 பேர் கொண்ட குழு நேற்று இரவு பெய்ஜிங்கிற்கு புறப்பட்டது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசத் துறையின் அழைப்பின் பேரில் இக்குழு 2025 செப்.23 முதல் செப்.30 வரை சீனாவில் பயணம் மேற்கொள்ள உள்ளது. இக்குழுவில், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் முகமது சலீம், ஜிதேந்திர சவுத்ரி, ஆர்.அருண் குமார், மத்தியக் குழு உறுப்பினர்கள் கே.ஹேமலதா, சி.எஸ்.சுஜாதா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.