india

img

பிரதமர் மோடியின் மக்களவை வருகைப் பதிவேட்டுடன் வந்த காங்கிரஸ் எம்.பி-க்கள்!

பிரதமர் மோடியின் மக்களவை பதிவேட்டுடன் காங்கிரஸ் எம்.பிக்கள் நாடாளுமன்றத்திற்கு வருகை புரிந்தனர்.

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பங்கெடுப்பது என்பதே குறைவு தான். கடந்த முறையும் நாடாளுமன்றத்திற்கு மோடி வருவதில்லை என்ற விமர்சனம் எழுந்தது.அப்போதும் காங்கிரஸ் எம்.பிக்கள் மோடியின் நாடாளுமன்ற வருகை பதிவேட்டின் விவரங்களோடு பதாகை ஏந்தி நாடாளுமன்றம் சென்றனர்.

இதுகுறித்து காங்கிரஸ் எம்பி மாணிக்கதாகூர் தனது ட்விட்டர் பதிவில்,

17 நாட்கள் நடைபெறும் லோக்சபா அமர்வில் பிரதமர் மோடி 2 நாள் தான் ஆஜரானார். 15 நாட்கள் காணவில்லை என அதில் தெரிவித்திருந்தார்.பிரதமர் மோடியின் வருகை பதிவு விவரங்களோடு காங்கிரஸ் எம்.பிக்கள் பிரதாபன் மற்றும் மாணிக்கதாகூர் ஆகியோர் நாடாளுமன்றத்திற்கு வருகை புரிந்தனர்.