india

img

புதிய கல்விக்கொள்கை குறித்து கருத்து கூற ஆகஸ்ட் 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு


புதிய தேசிய கல்வி கொள்கை வரைவறிக்கை மீது கருத்து தெரிவிக்க மேலும் 15 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 
மத்திய அரசின் கீழ் இயங்கும் மனிதவள மேம்பாட்டுத்துறை அண்மையில் தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை மீது கடந்த ஜூன் 30 ம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டது. 
இந்நிலையில் வெளியாக தேசிய கல்விக்கொள்கை வரைவுக்கு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த அறிக்கை தமிழாக்கம் செய்யப்பட்டு (www.tnscert.org) இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் வரைவு அறிக்கை மீது ஜூலை 31ம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என்று கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையில் இதுகுறித்து தனது கருத்தை பொது வெளியில் பேசிய நடிகர் சூர்யாவை பாஜகவினர் கடுமையாக சாடினர். சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த ரஜினியை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாஜகவினர் மிரட்டும் நடவடிக்கையில் இறங்கினர். இதற்கு சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதற்கிடையில் புதிய தேசிய கல்விக்கொள்கை குறித்து கருத்து தெரிவிக்க கால அவகாசத்தை ஆகஸ்ட் 15ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.