india

img

ஆதார் விவரங்கள் கசியவிட்ட இணையதளங்கள் முடக்கம்!

ஆன்லைன் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள், ஆதார் மற்றும் பேன் கார்டு விவரங்கள் ஆகியவற்றை கசியவிட்ட சில இணையதளங்களை ஒன்றிய அரசு முடக்கியுள்ளது.
இந்தியர்களின் ஆதார் தகவல்கள் சில இணையதளங்களின் கசிந்துள்ளதாக சமூக ஊடகங்களில் சிலர் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர். இதை அடுத்து, 2016-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஆதார் சட்டத்தை மீறும் வகையில் ஆன்லைன் பயனர்களின் ஆதார் விவரங்கள் கசியவிடப்பட்டதாக UIDAI அமைப்பு, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. இந்த புகாரை அடுத்து, சில இணையதளங்களை முடக்க ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In) நடத்திய விசாரணையில், பாதிக்கப்பட்ட இணையதளங்களில் பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக, இணையதளங்களின் ஆபரேட்டர்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
starkidz.com, asianbariatrics.com மற்றும் indianaerospaceandengineering.com உள்ளிட்ட இணைதளங்களும் முடக்கப்பட்டுள்ளதாக 'பிசினஸ் ஸ்டாண்டர்ட்' செய்தி வெளியிட்டுள்ளது.