india

img

இந்திய அரசின் 176 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கும் பிரான்சின் கெய்ன் நிறுவனம்  

இந்திய அரசின் 176 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கும் பிரான்சின் கெய்ன் நிறுவனம்  

கெய்ன் நிறுவனம் 1999 ஆம் ஆண்டில் இந்தியாவில் எண்ணெய், எரிவாயு அகழ்வுப் பணிக்கான ஒப்பந்தத்தைப் பெற்றது. ராஜஸ்தான் மாநிலத்தில் ராவா எனுமிடத்தில் எண்ணெய் அகழ்வைக் கண்டுபிடித்து, 2002 ஆம் ஆண்டிலிருந்து உற்பத்தியைத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்த 2007 ஆம் ஆண்டில் இந்நிறுவனம் பங்குகள் கெய்ன் இந்தியா நிறுவனமாகத் தொடங்கப்பட்டு பங்குச் சந்தையில் பங்குகள் பட்டியலிடப்பட்டன.  

இந்நிலையில், 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு  கெய்ர்ன் எனெர்ஜி தன்னுடைய பங்குகளை இந்தியாவில் உள்ள கெய்ர்ன் நிறுவனத்திற்கு மாற்றியது. ஆனால் இந்த பங்குகளை மாற்றியதால் முதலீட்டு ஆதாயத்தை கெய்ர்ன் இந்தியா அடைந்துள்ளதாகக் கூறி அந்த நிறுவனத்திற்கு ரூ.24,500 தொகையை வரியாகச்  செலுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில் இந்திய அரசு விதித்த வரி விதிப்பிற்கு எதிராக கெய்ர்ன் நிறுவனம் சார்பில் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. சில ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு இந்த விவகாரம் வரி பிரச்சனை அல்ல முதலீடு தொடர்பானது என்றும் ரூ. 24,500 கோடி வரி விதித்தது நியாயமில்லை என்றும் கடந்த ஆண்டு சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

இருப்பினும்,  இப்பிரச்சனையில் உரியத் தீர்வு கிடைக்காமல் போனதால் இந்திய அரசின் சொத்துக்களை முடக்கி இழப்பை ஈடு செய்ய கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் நடவடிக்கை எடுத்தது.  இதன்படி பிரான்ஸ் தலைநகர் பாரீஸுல் உள்ள ரூ.176 கோடி மதிப்பிலான இந்திய அரசின் 20 சொத்துக்களை முடக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச்செய்தியை பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா மற்றும் பினான்சியல் டைம்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது. 

ஆனால் சொத்து முடக்கம் தொடர்பாக இதுவரை எவ்வித நோட்டீஸோ நீதிமன்ற உத்தரவோ தங்களுக்கு வரவில்லை என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.