இந்தியாவில், பீடி புகைப்பழக்கத்தால் பல்வேறு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு கடந்தாண்டில் மட்டும் 5,50,000 பேர் உயிரிழந்துள்ளதாக எய்ம்ஸ்-ஜோத்பூர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பீடி புகைப்பழக்கத்தால் நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 1,00,000 பேர் உயிரிழப்பு; மகாராஷ்டிராவில் 50,000 பேரும், தமிழ்நாட்டில் 42,000 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த ஆய்வில் சேகரிக்கப்பட்டத் தகவல்களின்படி பீடி புகைப்பதால், நுரையீரல் புற்றுநோய் (0.39%), காசநோய் (0.20%), வாய் புற்றுநோய் (0.32%), இதய பாதிப்பு (0.17%) ஆகியவை ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.