india

img

நிலவை இந்து ராஷ்டிராவாக அறிவிக்க வேண்டுமாம்!

நிலவை இந்து ராஷ்டிராவாக அறிவிக்க வேண்டும் என அகில இந்திய இந்து மகாசபை தலைவர் சுவாமி சக்கரபாணி மகாராஜ் வீடியோ வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய, கடந்த ஜூலை 14-ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3,  ஆகஸ்ட்  23-ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் இறங்கி ஆய்வு மேற்கொண்டு வருகின்றது. இதைத் தொடர்ந்து ரோவர் தரையிறங்கிய இடத்தை 'சிவசக்தி பாய்ன்ட்' என பிரதமர் மோடி பெயரிட்டார்.  
இந்த நிலையில், நிலவை இந்து ராஷ்டிராவாகவும், சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்தை அதன் தலைநகராகவும் அறிவிக்க வேண்டும் என அகில இந்திய இந்து மகாசபை தலைவர் சுவாமி சக்கரபாணி மகாராஜ் வீடியோ வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மாட்டின் சிறுநீரைக் குடித்தால் கொரொனா பரவலை தடுக்க முடியும் என்று கூறி, கடந்த 2022-ஆம் ஆண்டு தில்லியில்  மாட்டின் சிறுநீரை குடிக்கும் நிகழ்வை சுவாமி சக்கரபாணி நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.