டெல்லி சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை 1.5 மடங்கு உயர்த்தி, மாதம் ரூ.30,000 ஆக வழங்க டெல்லி அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லி சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் கடந்த 10 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. தற்போது சட்டமன்ற உறுப்பினர்கள் மாத ஊதியமாக ஊக்கத்
தொகையுடன் சேர்த்து ரூ. 54 ஆயிரம் பொறுக்கின்றனர். இதில் ஊக்கத்தொகையாக ரூ. 30 ஆயிரமும், ஊதியமாக ரூ. 12 ஆயிரமும் அடங்கும்.
இந்நிலையில், நாட்டின் பிற மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியத்திற்கு இணையாக தங்களது ஊதியம் உயர்த்தப்பட வேண்டும் என, டில்லி முதலமைச்சர்
அரவிந்த் கெஜ்ரிவாலிடம் சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு, ஆம் ஆத்மி அரசு டெல்லி சட்ட சபையில் சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை மாதத்திற்கு 2.10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கும் ஒரு மசோதாவை நிறைவேற்றியது. சட்டசபையில் தாக்
கல் செய்வதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து முன் அனுமதி பெறப்படாததால், மசோதா செல்லுபடியாகவில்லை.
இந்நிலையில், பிற மாநிலங்களுக்கு இணையாக டில்லி சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை ரூ.12 ஆயிரத்திலிருந்து ரூ.30,000 ஆக உயர்த்தி வழங்க டில்லி அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, ஊதியமாக ரூ.30,000 மற்றும் மற்ற படிகளாக ரூ.60,000 என, மாதம் ரூ.90,000 ஆக ஊதியம் உயர்த்தப்பட்
டது.
நாட்டில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது டெல்லி சட்டமன்ற உறுப்பினர்கள் குறைவான ஊதிம் பெறுகின்றனர். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊக்கத் தொகையுடன் கூடிய ஊதியமானது உத்தரபிரதேசத்தில ரூ. 95,000 ஆகவும், தெலுங்கானாவில் ரூ. 2,50,000 ஆகவும், உத்தரகண்ட்டில் ரூ. 1,98,000 ஆகவும், ஹரியானாவில் ரூ. 1,55,000 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.