மும்பை:
அநாகரிகமான தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் அர்னாப் கோஸ்வாமி. ‘ரிபப்ளிக் டிவி’-யின் முதலாளியான இவர், தீவிர இந்துத்துவா பேர்வழி ஆவார்.இந்நிலையில், அர்னாப் கோஸ்வாமி தனது ரிபப்ளிக் டிவி-க்கு, தொலைக்காட்சி மதிப்பீட்டு புள்ளிஎனப்படும்- டிஆர்பி (Television Rating Point) மதிப்பை அதிகரிக்க, லஞ்ச முறைகேட்டில் ஈடுபட்டு, கடந்த2020 அக்டோபர் மாதம் கையும் களவுமாக சிக்கினார்.
அதாவது, ‘ரிபப்ளிக் டிவி’ சேனலை அதிகமானவர்கள் பார்க் கும் பட்சத்தில், விளம்பர வருவாய் அதிகரிக்கும் என்பதால், அர்னாப் கோஸ்வாமியே மும்பையிலுள்ள வீடுகளுக்கு மாதந்தோறும் ரூ. 400முதல் ரூ. 500 வரை லஞ்சம் கொடுத்துதனது சேனல்களை மட்டுமே பார்க்கவைத்தது ஆதாரங்களுடன் அம்பலமானது.டிஆர்பி மதிப்பீட்டு அமைப்பான ‘ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆய் வுக் கவுன்சிலின் (Broadcast Audience Research Council - BARC) தலைமை செயல் அதிகாரி பார்த்தோ தாஸ்குப்தாவுடன், அர் னாப் கோஸ்வாமி, வாட்ஸ் ஆப்-பில்நடத்திய உரையாடல் மற்றும் அவருக்கு அர்னாப் கோஸ்வாமி கொடுத்தரூ. 40 லட்சம் லஞ்சம் ஆகியனவும் வெளிச்சத்திற்கு வந்தது.
இந்த வழக்கில் தாக்கல் செய்யப் பட்ட முதல் குற்றப்பத்திரிகையில், அர்னாப் கோஸ்வாமி குற்றவாளியாக சேர்க்கப்படாதது குறித்து, மும்பை உயர் நீதிமன்றம் முன்புகாவல்துறைக்கு கேள்வி எழுப்பியிருந்தது.இதையடுத்து, செவ்வாயன்று மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இரண்டாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த மும்பை காவல்துறையின் குற்ற உளவுப் பிரிவு, அதில், ‘ரிபப்ளிக் டிவி’ இயக்குநரும் ‘ஏஆர்ஓ அவுட்லியர் மீடியா’ உரிமையாளருமான அர்னாப் கோஸ்வாமியை குற்றவாளியாகச் சேர்த்துள்ளது.
சுமார் 1800 பக்கங்கள் கொண்ட அந்த குற்றப்பத்திரிகையில் அர்னாப்புடன் அதே நிறுவனத்தின் சிவேந்து முலேகர், தலைமை செயல் அதிகாரி பிரியா முகர்ஜி மற்றும் தலைமைநிதி அதிகாரி சிவசுந்தரம் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது இபிகோ 409, 420,465, 468, 201, 204 மற்றும் 212 சட்டங்களின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் ‘ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆய்வுக் கவுன்சிலின் (BARC) முன்னாள் தலைவர் பார்த்தோ தாஸ்குப்தா உள்ளிட்ட 14 பேர்களின் பெயர்களும் சேர்க் கப்பட்டுள்ளன.